பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208 அம்பிகாபதி காதல் காப்பியம்

முன்னே செல்கிறோம் கதவுகள் மூடிப்
பின்னே வருகெனப் பேதைக் குரைத்தோம்;
145 என்னே காவிரி இவண்வராக் காரணம்
என்பதை யறிய ஏகினர் விரைந்து;
துன்புறூஉம் உளத்தொடு துருவினர் வீட்டை;
காவிரி எங்கணும் காண வில்லை.
பூவிரி கருங்குழல் போன தெங்கென

150 அயர்ந்துநாற் காலியில் அமரச் செல்கையில்
உயர்நிலைப் பலகைமேல் ஒருமடல் கிடந்தது.
மடலைக் கம்பர் மயக்கொடு படித்தார்;
மடலில் காவிரி வரைந்தது வருக:
அன்னையே! அப்பா! அண்ணனைக் காண

155 முன்னால் செல்கிறோம் கதவுகள் மூடிப்
பின்னால் வருகெனப் பிரிந்துமுன் சென்றனீர்.
சென்ற பின் பியான் செல்ல லோடு
கன்றிக் கதவினை மூடிய காலை,
முந்தொரு நாளிவண் முறையிலா முறையில்

160 வந்தவிள வரசனாம் வம்புடைக் கிள்ளி
வந்தெனை வலிந்து வம்புக் கிழுத்தான்.
அவற்குத் துணையாய் ஆட்கள் இருவர்
அவனொடு வந்தே அருகில் நின்றனர்.
கிள்ளி யென்னைக் கிள்ளு கீரையாய்

165 உள்ளி அவன்றன் உணர்ச்சிக் கிரையாய்
ஆக்க முயன்றான்; அவன்றனை வெளியே
போக்க முயன்றியான் புகல லானேன்:
புறாவைக் காக்கப் பொன்னார் உடலை
மறாஅது தந்த மன்னன் சிபியும்,


114. பேதை பெண். 149. கருங்குழல் - காவிரி. 151.உயர்நிலைப் பலகை - மேசை; மடல் - கடிதம். 157. செல்லல் - துன்பம். 158 கன்றி - நைந்து, 159. முறையிலா முறையில் - ஒழுங்கில்லா வகையில். 105. உள்ளி - நினைத்து. 189.மறாஅது- மறுக்காது (அளபெடை).