பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனைவரும் ஆற்றாது அரற்றிய காதை 209

170 கன்றினைக் கொன்ற காதல் மகனைக்
கொன்ற வத்தேர்க் காலால் கொன்ற
மன்னு புகழுறு மனுநீதி சோழனும்,
இளையன் என்றே எள்ளிய முதியோர்
உளைதல் இன்றி உவப்போ டேற்க

175 முதியவர் கோலம் முயன்று பூண்டு
பதியத் தீர்ப்பு பகர்ந்த மன்னனாம்
கரிகால் வளவனும் தோன்றிக் காத்த
மரபில் வந்தும் மாண்பே யிலாதோய்!
குடிகளைக் காக்கும் கொற்றவன் மகனிப்

180 படிசெயல் முறையோ? பழியேற் காமே
அகன்றிடு இவணின்று, அரண்மனை ஏகெனப்
புகன்றதைக் கேளாதவன் புகல லானான்:
என்னுறு தங்கை அமரா வதிபால்
நின்னுறு தமையன் நினைத்ததை முடித்ததால்

185 நின்னையான் விரும்புதல் நீதி யாமென
என்னை நெருங்கி இழுக்க லானான்;
பின்னையான் கூக்குரல் எழுப்பவே, பேதை
மட்டி யாட்களின் துணைகொடென் வாயைக்
கெட்டியா யடைத்துக் கீழே கிடத்தினான்;

190 நினைத்ததை முடித்தான் நெஞ்சம் இலாதான்.
எனையவன் விட்டே எழுந்து செல்கையில்
இங்கே யுள்ள இருப்புத் தடிகொடு
மங்கா தந்த மடையன் தலையைத்
தாக்குத் தாக்கெனத் தாக்கினேன்; தலையைத்
195 தூக்க வியலாது, குருதி தோயத்



170. காதல் - அன்பு. 174.உளை தல் - வருந்துதல். 179-180. மகனிப்படி - மகன் இப்படி - மகன் இவ்விதமாய். 182. கேளாதவன்- கேளாது அவன். 184. தமையன் - அண்ணன். 187. பேதை - அறிவிலி 188. மட்டியாட்கள் - மதியிலா ஆட்கள்; துணைகொடு- துணை கொண்டு, 192. இருப்புத் தடிகொடு - இரும்புத் தடி கொண்டு. 193. மங்காது - மனம் பின்னிடாமல்.