பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனைவரும் ஆற்றாது அரற்றிய காதை

211

குடியைச் சேர்ந்தோர் குறுகி யங்கே
ஆறுதல் கூறி அவர்தமைத் தேற்றி
225வீறுடன் மாண்ட வெற்றி மகளை
அடக்கம் செய்தனர். அதன்பின் கம்பர்
கடக்க எண்ணினர் காவிரி நாட்டை;
மக்களை யிழந்த மயக்கம் தாளாமே
தக்கதம் மனையாள் கற்பகத் தாச்சியொடு
230புக்கனர் பாண்டியப் புலத்தி னுள்ளே.
கம்பர் மகளைக் கற்பழித் திட்ட
வம்புச் செயலால் வறிதே மாண்ட
தம்மகன் கிள்ளியின் தகையிலாச் செயற்கு
விம்மிச் சோழனும் தேவியும் வியர்த்து
235வருந்தி யரற்றினர்; வருவரோ மாண்டவர்?
திருந்துமோ உலகமித் தீமைகள் கண்டுமே?
அனைவரும் ஆற்றா தரற்றிய கொடுமையை
நினைவுறுங் காலை நெஞ்சம் நடுங்குமே!


323. குடியைச் சேர்ந்தோர் - குடும்பத்தைச் சார்ந்த உற்றார் உறவினர் நண்பர்கள். 225. வீறுடன் - வீரப் பெருமையுடன். 227. காவிரி நாடு - சோழ நாடு. 280. பாண்டியப்புலம் - பாண்டிய நாடு. 235. அரற்றினர் - அழுதனர்.