பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி மணந்த அருமைக் காதை

217

125இரவே யின்னுமா இருக்கின் றனை நீ!
விடிந்ததும் திருமணம் விரைவில் நடைபெறும்.
கடந்திடு ஒல்லே! கடிமணம் எமக்கு
முடிந்திடும் நாளை யிரவே முதலிரவு.
கடுங்கதிர் தோன்றக் காத்திருக் கின்றது;
130அடுமுனை விரைவில் அகலா யாவின்.
இப்போது வல்லே ஏகு!முத லிரவாம்
அப்போ தகலா தமர்ந்திடு நிலையாய்!
இப்போது ஞாயிற்றுக் கிடங்கொடு உடனே
என்று கெஞ்சி இரவை வேண்டினாள்
130துன்று மகிழ்வால் துள்ளித் தாண்டினாள்.
ஒண்ணுதல் உருவம் தீட்டிய ஓவியத்
தன்னை மகிழ்வு ததும்பப் பார்ப்பான்;
நாளை நேரில் நங்கையைப் பார்க்குங்
காலை அழகைக் களித்துப் பருகலாம்
140என்றோ வியத்தை இடுவான் பைக்குள்;
ஒன்றும் ஆவல் உந்த மீண்டும்
ஓவியம் எடுத்ததை உவந்து நோக்குவான்;
காவியம் இவளெனக் கரைந்து புகழ்வான்.
இங்ஙனம் களித்திவன் இருக்க ஒருபால்;
145மங்கையின் நிலைமை மற்று வருக:

(அமராவதியை அணிசெய்தல்)


மணநாள் முன்னாள் இரவு மணமகள்
அமரா வதிதனக் கணிபெற நலங்கிட


127. ஒல்லே - விரைவாய். 128. முதல் இரவு - மணமக்கள் முதல் முதலாக உடல் உறவு கொள்ளும் இரவு. 129. கடுங்கதிர் . ஞாயிறு. 130. அடும் - அழிக்கும் 131. வல்லே - விரைவில். 132. முதலிரவின்போது நீங்காது நிலையாய் இருட்டாகவே தங்கிவிடு. 135. துன்று - மிகுந்த. 138. ஒண்ணுதல் - அமராவதி. 143. கரைந்து - உருகி. 145 மங்கை - அமராவதி; மற்று வருக . அடுத்ததாக வருவதாகுக. 147. நலங்கு - திருமணத்துக்கு முன் செய்யும் ஒருவகைச் சடங்கு.