பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி மணந்த அருமைக் காதை 218


மூக்குமேல் மிகுசினம் முந்தக் கொண்டு
நோக்கிப் பொறாமையால் நொந்திடும் என்று
முத்துப் பிலாக்கினை மூக்கிடைச் சுவரில்

175 தொத்திக் கீழே தொங்கிடச் செய்தனர்;
கண்கட் கணிகலன் கண்ணோட்ட மாப்போல்
வெண்பல் தம்மை விளக்கும் அணிகலன்
முத்தை எள்ளி முகிழ்க்கும் முறுவலே
என்று சொல்லி இனிதவை அடக்கினர்;

180 இதழ்கள் வாளா இருக்குமா என்ன?
இதழ்களில் செங்குழம்பு இன்னும் இட்டுப்
பவளத்தை வீணே பழிக்கச் செய்தனர்;
கேட்டலே செவிகட் கணியெனக் கிளப்பின்
கேட்குமா செவிகள்? கேளாச் செவிகளில்

185 தோடுகள் பதித்துத் தொங்கலும் கீழே
ஆடிடச் செய்தனர்; அவற்றின் மேலே
மாட்டல் எனுமணி மாண நீட்டி
மாட்டியும் மாணாச் செவிகளில் மன்னக்
கொப்பும் பொவுடும் குறையிலாது கோத்தனர்;

190 தோளிலும் மார்பிலும் தொய்யில் எழுதினர்;
ஆரக் குடங்களில் ஆரச்சாந் தப்பினர்;


172. உலகியலில், கோபிப்பவரை, மூக்குமேல் கோபத்தை வைத் துக்கொண்டிருக்கிறார் என்பது மரபு; அதுபோல், மூக்கின் இடைச்சுவர், மூக்குமேல் கோபம் கொண்டுள்ளது எனும் மரபுப் பொருளும்,மூக்கின் மேல் பகுதியில் மூக்குத்தி யிட்டதால் அதன்மேல் கோபம் கொண் டுள்ளது என்னும் பொருளும் உள்ளமை காண்க. 174. பிலாக்கு- மூக்கிடைச் சுரணி. 180. இதழ் -உதடு. 185. தோடு -காதணி ; தொங்கள் - தொங்கட்டான் என்னும் அணி. 138. மாணா - மாண்புபெறாத. 189. கொப்பு, பொவுடு - காதணி வகைகள். 190.தொய்யில் - கோலம். 191. ஆரக் குடங்கள் - சந்தன மரத்தால் செய்த குடம் போன்ற நிறமுடைய முலைகள்; ஆரச் சாந்து - சந்தனச் சாந்து.