பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி மணந்த அருமைக் காதை 221


ஐம்பது பொன்செல வாகும் என்றனர்; பின்னர்,
பகைவரை வெல்லும் படைஞர் தோள்களில்
வகைபெற அணிமற வலயம் போல
மலர்க்கணை தொடுக்கும் மாரனை வெல்ல

220 வேயுறு தோள்களில் வீக்கிய தைப்போல்
காயும் ஒளியுறு கடகம் பூட்டினர்;
வணக்கமும் வரவேற்பும் வருவிருந் தோம்பலும்
இணக்கமாய்ப் புரியும் இருகை தமக்குப்
பேசும் வாயாய்ப் பெருந்துணை புரியும்

225 மாசில் வண்ண வளையல் வகைபல
கலகலெனப் பேசக் கைகளில் மாட்டினர்;
மோதிர விரல்கள், மோதிர விரலெனும்
பேர்தான் பெரிய பேராம், ஆனால்
மோதிரம் இலையென முணுமுணுக்கா வாறு

230 மோதிர விரல்களில் முழுதும் மணிபொதி
கணையா ழிகளைக் கவினுறச் செருகினர்;
கலீர்கலீர் கலீரெனும் கல்லொலி, காளை
இளைஞரை விலக்க எச்சரிக்கு மாறு
வளைவுறு சிலம்புகள் வனிதையின் கால்களில்

235 ஒளிபெறப் பூட்டி உவகை யுற்றனர்;
முன்னர்ப் பூண்ட அணிகள் முழுதையும்
பின்னர்ப் பெயர்த்திவ் வாறு புத்தம்
புதிய கலங்களைப் பூட்டினர் பொலிவொடு;
சுமையால் கழுத்து சோர்வுறும் வண்ணம்


218. மறவலயம் - படை வீரர்கள் தோளில் அணிவது 219. மலர்க்கணை -காம பயக்கந்தரும் மலர் அம்பு: மாரன் - மன்மதன் 220. வேயுறு - மூங்கில் போன்ற; வீக்குதல் - கட்டுதல். 221.காயும் ஒளி - வீசுகின்ற ஒளி; கடகம் - தோள் அணி. 222-226 வரும் விருந்தினரிடம் பேச முடியாத கைகள் பேசுவது போல வளையல்கள் ஒலி செய்து, கைகட்குப் பேசும் வாய் உள்ளனவாம். 230. மணி பொதி - ஒன்பது மணிகளும் பதித்த 231.கணையாழி - மோதிரம். 232. கல்லொவி - சிலம்புக்குள் உள்ள பரல் கற்களின் ஓசை.