பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்த்துப் பகுதி

21

உள்ளத்தை ஊனை உருக்கி

உள்ளொளியைப் பெருக்குபே ரொளியே!

வள்ளலாய்நற் பன்னூல் வழங்கும்

வண்டமிழே வளமொடு வாழ்கவே!"

தமிழ் அறிஞர் வாழ்த்து

(4) “மூவாயிரம் ஆண்டாய் மொழிகள்பல வந்து

முற்றுகை யிட்டு

மூவாத கன்னி மொழியான தமிழை

முடிக்க முயன்றும்,

ஒவாதே உஞற்றி உயரியசெந் தமிழை

உயிர்போற் காத்துச்

சாவாது நிலைஇய சான்றோர்தம் நற்புகழ்

சால்பொடு வாழ்கவே!”

உலகப் பொது வாழ்த்து

(5) “உலகம் வறுமையும் பிணியு மின்றி

ஓங்கி வாழ்க!

உலகம் பகையும் போரு மிலாமே

ஒன்றி வாழ்க!

உலகம் எந்தத் தீங்கு மிலாதே

உயர்ந்து வாழ்க!

உலகம் நலமும் வளமும் பெற்றே

உவந்து வாழ்கவே!”

3. ஊனே - உடம்பை. 4. நற்பன்னூல் - நல்ல பல நூல்கள். நான்காம் பாட்டு: 2. மூவாத - முதுமை அடையாத. 3. ஒவாதே - விடாமல் (தொடர்ந்து); உஞற்றி - முயன்று உழைத்து. 4. நிலைஇய - நிலைத்த (அளபெடை); சால்பொடு - சிறப்பொடு. ஐந்தாம் பாட்டு: 4. உவந்து - மகிழ்ந்து.