பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றெலாம் பிதற்றி ஏங்கி நைந்து
துன்றிய காதலரைத் தொடர எண்ணிக்
கொண்டு வந்த கொடிய நஞ்சை
உண்டிப் பொல்லா உலகை நீத்து,

345 தணந்தவர் உயிரைத் தன்னுயிர் மணக்க
அணைந்த கல்லை ஆருடல் மணக்க
இணைந்தனள் இவ்வணம் இனியகா தலரொடு.
வீடுபே றெனவே விளம்பப் பெற்றிடும்
ஈடிலா ஒருபே றிருப்ப துண்டேல்,

350 அம்பிகா பதியும் அமரா வதியும்
இந்த உலகைவிட் டேகிய பின்னர்
அந்த வீடுபே றடைதல் உறுதியே!


(வாழ்த்து வெண்பா)


"சுந்தர சண்முகனின் சொல்லோ வியமான
செந்தமிழ் நன்னூலாம் சீரம் பிகாபதி
காதல் விளக்கிடும் காப்பியம் இன்பமாய்
ஒதுவோர் வாழ்க உயர்ந்து."


344. உண்டிப் பொல்லா - உண்டு இ பொல்லா - சாப் பிட்டு இந்தப் பொல்லாத ; நீத்து - விட்டு நீங்கி. 345. தணந்தவர் - பிரிந்த காதலர், அம்பிகாபதி, மணக்க - கூட, சேர. 'மணத்தல் கூடுதல்' என்பது சேந்தன் திவாகர நிகண்டு நூற்பா. 346. ஆருடல்அரிய உடம்பு. 848. வீடு பேறு - மோட்சம் அடையும் பேறு. 349. பேறு - பாக்கியம்,


சொல்லோவியமான காப்பியம். நன்னூலாம் காப்பியம் - அம்பிகாபதி காதல் விளக்கிடும் காப்பியம். 1. சொல் ஓவியம் - சொற்களால் வரைந்த சித்திரம். 3. கன்னுால் - நல்ல நூல். 4. ஓதுவோர்கற்பவர். .