பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. நாடு நகர் நலங்கூறு காதை

[சோழ நாட்டு வளம்]

உலகெலாம் அளந்த ஒண்டமிழ்ச் செம்மொழி
குலவும் இனிமை கூர்தமிழகத்தில்
நீர்வளம் நிலவளம் நெல்வளம் நிறைந்து
ஊர்வளம் குடிவளம் ஒருங்கே சான்று
5 சோறுடைத் தென்னும் சோழநன் னுட்டின்
வீறுடைப் புகழ்தான் விளம்பற் பாறோ!

(பெருமக்களால் பெருமை)

தன்னடை உயிரினத் தகவாய்க் காப்பது
மன்னன் கடனென மதித்து மகிழ்ந்துதன்
பொன்னுடல் ஈந்து புறவினைப் புரந்த
10 மன்னவன் சிபியின் மரபினர் நாடு;

இந்திர விழாவினை இரும்புகழ்ப் புகாரில்
செந்தமிழ் மணக்கச் சிறப்பொடு தொடங்கியோன்,
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்,
வீங்குதோள் அவுணரை வென்றவன் நாடு;
15 ஒன்றே உயிரெனும் உண்மையை நாட்டக்

கன்றினை யிழந்த கறவையின் கண்ணிர்
காணப் பொறாதக் கன்றினைக் கொன்றதன்
நாணமில் மகனை நசுக்கி மாய்த்தவன்,
அரச வினைஞரும் அரும்பெருஞ் செல்வரும்
20 வரிசையாய்க் காண வந்துநில் மக்களை

அருஞ்சொற் பொருள் : 9. புறவு - புறா; 18. எயில் - கோட்டை; தொடி - வீரவலயம்; செம்பியன் - சோழன்; 14. அவுணர் - அரக்கர். 18. கறவை - பசு.