பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நாடு நகர் நலங்கூறு காதை

23

உரைசெய உள்ளே விடாதவிவ் வுலகில்
யாரா யினுஞ்சரி என்னிடம் வருகென
ஆராய்ச்சி மணிகட்டி ஆண்ட நாடு;
வலிய இமய வாகை சூடிப்

25 புலியை யதனிற் பொறித்த புகழோன்,
இளையன் வேந்தனென் றெள்ளிய பெரியரின்
உளமது நிறைவுற உள்ளே போந்து
முதியவர் புரைய முடிமயிர் பூண்டு
புதிய கோலம் புனைந்தே இருவரின்

30 வழக்கது தீர்த்த கரிகால் வளவன்
இழுக்கமின் றாண்ட இரும்பெரு நாடு;
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமெனக்
கவுந்தி யடிகள் கழறிய தாக

35 இளங்கோ வடிகள் ஏத்திய நங்கை,
கனல்தெறி சொற்களால் கடுவழக் காடிக்
கணவன் களங்கம் களைந்த களத்தி,
பாரெலாம் பத்தினி வணக்கம் பரவக்
காரண மாய கடவுட் கண்ணகி;

40 மணிமே கலையின் கையில் மன்னிய
அமுத சுரபியில் முதன்முத லாக
அமுதம் வளர அமுதம் இட்டவள்,
கணவன் மடிந்ததாய்க் காதால் மடுத்ததும்
தணலில் புக்க தகைசால் ஆதிரை;

45 கயவன் ஒருவன் கையசைத் தழைக்க
அயலவன் உளத்தில் அகப்பட் டேனென
மயலாய் வீழ்ந்த மாண்புறு மருதி;
முத்தமிழ்த் திருமணம் முடிக்கு முன்பே
அத்தை மகளும் அன்புறு தரும

28. புரைய - ஒப்ப. 31. இழுக்கம் - குற்றம். 34. கழறுதல் - சொல்லுதல். 37. களத்தி - இல்லாள். 40. மன்னுதல் - பொருந்துதல். 43. மடுத்தல் - உட்புகுதல்; கேட்டல். 44. தணல் - நெருப்பு.