பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அம்பிகாபதி காதல் காப்பியம்

இடமது சிறிதே ஈந்ததும் பெரிய
மடமுழு தினையும் மடக்குவோர் மான
எட்டிப் பார்க்க இடஞ்சிறி தளவே
விட்ட மார்பின் வியலிடம் முழுமையும்

25 தட்டிக் கொண்ட தளதள முலைகள்,
இன்ன தெனும்படி இடையே இன்மையால்
மின்னிடை துடியிடை மெல்லிய கொடியிடை
என்னும் இவைதாம் இல்பொருட் குவமையாம்;
அரசிலை ஆலிலை அல்குலுக் கொப்போ?

30 உரைசெய ஒல்லா தொருவ ரானுமே.
வேய்க்குறு இலக்கணம் விளக்குவ தோள்கள்,
காந்தள் இலக்கணம் காட்டுவ கைகள்,
துடைக்கு வாழை தோற்ப துறுதி,
நடைக்குநல் லன்னம் சாயற்கு நன்மயில்

35 அடைவே அடிகளின் மென்மைக் கனிச்சம்
அமைவுறு உவமை யாமென அறைவது
அமரா வதியை அறியார் உளறலாம்;
நமரவள் அழகை நவிலவொண் ணாதே!

(நிலாவின் தோற்றம்)


வையம் சுட்ட வன்பழி துடைக்க
வெய்யோன் தன்கொடு வெய்யில் அடக்கப்
பைய மாலைப் பொழுது படர்ந்தபின்
படைபல சூழப் பாராள் வேந்தன்
நடைபோ டல்போல் தாரகை நடுவுறு
தண்ணிய திங்கள் தகதக ஒளியை
45 மண்ணில் பரப்பி இருட்பகை மாய்த்துக்


32. மான - ஒப்ப. 34. வியல் - அகலம். 27. துடி - உடுக்கை. 29. அல்குல் - பெண்குறி. 30. ஒல்லாது - முடியாது. 32. காந்தள் - கை போன்ற ஒருவகை மலர். 35. அனிச்சம் - மெல்லிய ஒருவகை மலர். 39. வையம் - பூமி. 40 - வெய்யோன் - ஞாயிறு. 41. பைய - மெல்ல. 48. தாரகை - நட்சத்திரம்.