பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதலர் காட்சிக் காதை

33

என்னும் பெயரினள் எதிர்பா ராமே
துன்னிய காதலால் துயருற லானாள்;
அம்பிகா பதியின் அழகில் மயங்கி

95 வம்பாய் அவன்பால் வைத்தனள் நாட்டம்;
"அவனே என்றனக் கமைந்த காதலன்
அவனை அடியேன் அடைந்தே தீர்வல்'
என்றே சூளுரை இயம்பி ஊண்துயில்
ஒன்றும் கொளாமே உயிர்த்தனள் நெடிதே.

100 கிணறு வெட்டப் பூதம் கிளர்ந்த
கதையே யாகிக் கம்பர் மகன்தலை
விதியே யென்ன விடிந்தது சனியனே!


97. தீர்வல் - தீர்வேன். 98. குளுரை - சபதமொழி; துயில் . தூக்கம். 100. கிளர்ந்த - எழுந்த,

அ.—3