பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் மகனைக் கடிந்த காதை

41

(கம்பர் மனைவி குறுக்கிட்டுக் கூறுதல்)

கற்பகத் தாச்சி கடிதவண் குறுகி
பொற்புறு கணியப் புலவன் ஒருவன்

50 அம்பிகாபதிக் ககவை நூஉறு
நம்பு வீரென நவின்றனன் ஒருநாள்;
என்மகன் இருநூ றியாண்டுகள் வாழ்வனென்
றின்முகத் துடனே இயம்பக் கம்பர்
புன்முறு வலுடன் புகல்வார் மகற்கு:

(கம்பர் அம்பிகாபதிக்குக் கூறுதல்)

55 நன்றே யுனக்கு நன்மணம் நடத்த
என்றோ முயன்றேன் இணங்க வில்லைநீ.
அழகும் புலமையும் அமைந்த நிற்குப்
பழகி யோர்பலர் பயந்த பெண்ணைத்
தரவே விரும்பினர்; தருக்கோ டிசைவு

60 தரவே யில்லைநீ தக்கதோ நின்செயல்?
அம்மான் மகளுளாள் அத்தை மகளுளாள்
இம்மா நிலத்தில் இனியவர் பலருளர்;
திருவளர் ஒருத்தியைத் தேர்ந்து நமது
திருவழுந் தூரில் திருமணம் முடிக்கலாம்

65 விரைவிலுன் விருப்பம் யாதென விளம்பென,

(அம்பிகாபதியின் விடை)

நமர்பயந் தளிக்கும் நங்கையர் வேண்டேன்
அமராவதியே ஆருயிர்க் காதலி
நலவழி நாடும் நல்லோர் நடுவண்
குலவழி வேற்றுமை குறுக்கிட வொல்லுமோ?
70 ‘ஒன்றே குல’மெனும் உயர்திரு மந்திரம்
நன்றே நவின்றுளார் நற்றிரு மூலர்;

48. அவண் - அவ்விடம். 59. தருக்கு - இறுமாப்பு.