பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கம்பர் மகனைக் கடிந்த காதை

43

(கம்பர் மகனைக் கடிதல்)

அகமது மாழ்கி அதிர்ச்சி யுற்றார்;
‘ஒன்றே குல’மெனும் உயர்ந்தோர் கொள்கையை

100 நன்றே வேந்தன் நயக்க வேண்டுமே!
‘விரலுக் கேற்ற வீக்கம்’ என்ப,
‘வரவுக் கேற்ற வாழ்’வென மொழிப;
அவரவர் தகுதிக் கமைந்ததே வாழ்க்கை
முடவன் கொம்புத் தேன் பெற முயன்ற

105 மடமை போன்றதே மைந்தநின் செயலெனக்
கம்பர் மகனைக் கடிந்துரைத் தாரரோ.

98. மாழ்குதல் - மயங்குதல். 100. நயத்தல் - நயமாய் விரும்புதல். 101. என்ப - என்று சொல்லுவர். 103. மொழிப - மொழிவார்கள்.