பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைச்சர் மகனின் சூழ்ச்சிக் காதை

45.

அவளை மணக்கயான் ஆவல் கொண்டுளேன்.
இருபெருந் திருமணம் இசைவாய் நிறைவுற

25 ஒருபெருஞ் சூழ்ச்சி உனக்கறி விப்பல்;
இன்றுமுன் னிரவுநீ ஏந்திழை யவள்பால்
சென்றுரை யாடல் செய்து கொண்டிரு.
குறுக்கே வந்தியான் குழப்பிநம் அன்னை
இறக்கும் நிலையில் இருப்பதாய்க் கூறி

30 உன்னை உடனே ஏகென உரைப்பேன்;
அன்னையே என்றுநீ அலறிப் புடைத்தே
ஓடிய பின்பியான் உரைதொடுத் தவளை
நாடி வந்ததை நயமொ டுரைத்தே
எனது தூண்டிலில் எளிதாய்ச் சிக்கி

35 எனையவள் மணக்க இசையச் செய்வேன்
பின்னை யெல்லாம் பேசிக் கொள்ளலாம்
என்னவே சிம்மன் தங்கைக் கியம்ப,
அன்ன வாறே அவள்சென் றிருக்க,
சிம்மன் கன்னி மாடம் சென்று

40 விம்மி நடித்து விளம்ப லுற்றான்;
தங்கையே நந்தாய் தாங்கொணாப் பிணிவர
மங்கி விரைவில் மடியும் நிலையில்
உள்ளாள் உடனே ஓடுநீ என்ன,
தள்ளையே யென்று தாரகை ஒடிட,

நமனாய் அன்னைக் கடுத்ததை நவில்கென
அமராவதி யஞ்சி அவனை வினவ,
அமர ஒப்புதல் அவனும் கேட்க,
அமரலாம் என்றே அவளும் உடன்பட,

(சிம்மன் கூறல்)

மாரடைப் பென்னும் மாளும் பிணியில்

50 சீருடை அன்னை சிக்கினள் என்ன

,

26. ஏந்திழை - அணிபூண்ட அமராவதி. 44. தள்ளை - தாய். 45. நமன் - எமன்.