பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



46

அம்பிகாபதி காதல் காப்பியம்

(அமராவதி வினவல்)

தங்கை யோடியும் தனியொரு மகனீர்
இங்கே யின்னும் இருப்ப தேனென,

(சிம்மன்)

மங்கலம் சான்ற மங்கை யுனைப்போல்
எங்கெலாம் தேடினும் எவரும் இலரே!
இங்கு நின்னொடு இருப்பின் அன்னையால்
தங்கிய கவலை தானே பறந்திடும்
இங்குத் தங்கிய காரணம் இதுவென,

(அமராவதி)

தாயார் இறக்குந் தறுவாயாகில்
சேயாம் நீரவண் சேரலே முறையென,

(சிம்மன்)

50 ‘இடுக்கண் வருங்கால் நகுக’வென் பதுகுறள்
இடுக்கண் வரினே இனியவர் தம்மொடு
நடுக்க மின்றி நகைத்துரையாடல்
இடுக்கணுக் கிடுக்கண் ஈதலா மாதலின்
நின்னொடு சிறிது நெகிழ்ந்துரையாடவே

65 இன்னும் இவணியான் இருப்ப தாமென,

(அமராவதி)

அன்னையின் நிலையை அறவே மறந்து
பின்னைவே றென்ன பேச வுளதென,

(சிம்மன்)

அன்னை யொருகால் மாளின் அதன்பின்
என்னைப் புரப்பவர் யாரென அறியேன்

59. சேய் - குழந்தை, பிள்ளை; அவண் - அவ்விடம், 60, இடுக்கண் - துன்பம். 65. இவண் - இவ்விடம்.