பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமைச்சர் மகனின் சூழ்ச்சிக் காதை

49

(சோழமா தேவியும் அமைச்சன் மனைவி கமலியும் ஆங்கு வருதல்)

அமராவதி அன்னை அரசமா தேவியும்
அமராச் சிம்மனின் அன்னை கமலியும்
அமரா வதியைக் காணவங் கடைந்தனர்.

(அமராவதி சிம்மனைக் கடிதல்)

சிம்மநின் னன்னை செறிந்த மகிழ்வொடு
120 செம்மையா யிருப்பதைச் சிறிது காணீ!
உனது வஞ்சகம் ஊரறி ஒன்றாம்;
இனமும் இங்கா இருக்கிருய் மடவோய்?.
எனவே கடிந்தபின், இப்பால் தன்னை
அடைந்ததன் அன்னையை, கமலியை நோக்கி
125 நடந்ததைக் கூறவே, நழுவினன் சிம்மன்.

(கமலியின் வேண்டுகோள்)

கமலி அமராவதி காலில் விழுந்தே
அமளி செயாதிதை அடக்கிட வேண்டுவல்;
மன்னர் அறியினென் மகன் தலை உருளும்;
அன்னமா தேவியே! அமரா வதியே!
130 சிம்மனைக் காத்தல்உம் சிறந்தபே ரருளென,
சிம்மனைப் பொறுத்ததாய்ச் செப்பினர் இருவரும்.
விம்மிய கமலியின் வேதனை குறைந்ததே.
ஆங்குநின் றகன்றபின் அலமருங் கமலி
தாங்கொணாத் துயரொடு தன்மனை ஏகிக்
135 கணவன் காடவற் கண்டு நடந்ததை
உணவு கொள்கையில் உரைத்தனள் அஞ்சியே.

117. அமரா - பொருந்தாத. 119. செறிந்த - மிகுந்த, 123. இனமும் - இன்னமும் (இடைக்குறை). 137. அமளி - ஆரவாரம், ஆர்ப்பரிப்பு. 133. அலமருதல் - கலங்குதல்.

அ.—4