பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. தாரகை அமராவதியொடு சூழ்ந்த காதை

அம்பிகா பதியை அடைய விரும்பிய
தாரகை யுன்னித் தனக்குள் சூழ்ந்தாள்:
அவனைக் காண்டல் வேண்டுமாயின்
அவன் கன்னி மாடம் அடிக்கடி அடையச்

5 செய்தலே நன்று.; சீரியோன் அங்கண்
எய்தல் வேண்டின் அமராவதி யிசைவு
தரச்செய வேண்டுமத் தலைவியே யவனை
வரச்செயு மாறு வழிசெய வேண்டும்.
அம்பிகா பதியின் அளவில் புலமையை

10 நம்பச் செயினம ராவதி நயப்பாள்
என்று சூழ்ந்தே ஏகிய தாரகை
அமரா வதியின் அடிபணிந் திட்டென்

(தாரகை கூறல்)

தமையன் இழைத்த தவற்றை யெண்ணி
அமைதி யிலாஅமே அலமரு வலியான்

15 பொறுத்தருள் கென்று பொய்யாய் வேண்டப்
பொறுத்ததா யவளும் புகலத் தாரகை
அம்பிகா பதியின் அழகும் அறிவும்
உம்பரும் பெற்றிலர்; உயர்புலத் தவரைக்
காணநாம் பெற்றது கருதினற் பேறே;

20 மாணநாம் அவரை மகிழ்ந்திங் கழைத்துத்
தமிழின் சுவையைத் தரச்செயப் பெறினே
அமிழ்த மாந்தின ராவோம் என்ன,

2. உன்னி - எண்ணி 5. சீரியோன் - சிறந்தவன்; அங்கண் - அவ்விடம். 6. எய்தல் - அடைதல். 18. புகல - சொல்ல. 18. உம்பர் - தேவர்; புலத்தவர் - அறிஞர். 20. மாண - சிறப்புற. 32. மாந்துதல் - உட் கொள்ளல்.