பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அம்பிகாபதி காதல் காப்பியம்

என்னடி பிதற்றினுய் என்னையேன் ஏசினாய்?

160 கன்னி மாடம் கடந்துநீ காவினுள்
புக்கதைக் கண்டியான் புலப்படா தெவர்க்கும்
புக்கனன் ஈண்டுநீ புகன்றவை யனைத்தும்
பின்னே மறைந்து பேதுறக் கேட்டனன்.
என்னே நின்செயல்! என்னையும் அவரையும்

165 கொன்னே ஏய்த்தனை குள்ள நரிநீ!
‘தன்னையே தன்வினை தகிக்கும்’ என்ப;
இன்னே யிவணின் றேகுதி என்றாள்
அவளே அமரா வதியாம் அரிவை.
துவளுங் கொடியெனத் தொழுது தாரகை

170 பொறுத்தருள் கென்றவள் பொன்னடி வீழ்ந்தாள்.
வெறுத்தவள் விரைவில் செல்கென விரட்டக்
கைக்கெட் டியது வாய்க்கெட் டாதுளம்
தைக்கும் துயரொடு தாரகை போந்தனள்.
அமரா வதியும் அம்பிகா பதியும்

175 அமைவொடு சிறுபொழு தசையாது நின்றபின்
அம்பி காபதி யவளை நோக்கி
நம்பவோ தாரகை நவின்றதை யென்ன,

(அமராவதி கூறுதல்)

அமரா வதியவற் கன்புடன் கூறுவாள்:
நுதலா தும்மை நொய்வொடு வைது

180 முதலில் வெறுத்தது முற்றும் உண்மை.
பின்னர்உம் புலமையின் பெற்றி யறிந்ததும்
நன்னர்ப் பழக நச்சினேன் என்ன,

168. பேது - வருத்தம். 167. ஏகுதி - செல்வாய். 179. நுதலாது - கருதாது; நொய்வு - எளிமை. 181. பெற்றி - இயல்பு, தன்மை. 183. நச்சினேன் - விரும்பினேன்.