பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அம்பிகாபதி காதல் காப்பியம்

25 உயிரொடு சென்றே உரியநேரத்தில்
கன்னி மாடக் காவினை யடைந்து
கன்னி வரும்வரை காத்து நின்றனன்.
அங்கஞ் ஞான்றவன் அமரா வதியாம்
தங்க மேனியாள் தளர்நடை யிட்டு

30 வந்ததைக் கண்டதும் வருக' என்றனன்.
செந்தமிழ்த் தேன்மொழி செய்தனள் வணக்கம்.
அங்கண் ஓரிடம் அமர்ந்தனர் இருவரும்
எங்கணும் அமைதி இவருளும் அமைதியே!
ஒருவர் மாறிமற் ருெருவரை நோக்கியே

35 இருவரும் மாறிமாறி இதயம் எய்தினர்.
அதிர்தலே யிலாத அம்பிகா பதியை
எதிர்பாரா அதிர்ச்சியொன் றெதிர்நோக் கிற்றே.
கட்செவி புகுதலா? காவலர் வருகையா?
உட்கலின் பொருட்டுவே றுளவா? இலையிலே.

40 அமரா வதியை அம்பி காபதி
‘அமரு’ என்றே அழைத்த படியப்
பாவையின் கையைப் பற்ற முயன்றனன்.
‘ஆ’ வென அலறியே ‘அமரு’ மறுத்தனள்.
அலறிய காரணம் அறைகென நம்பி
உலறிய நெஞ்சொடு வினவ, உரைப்பாள்:

(அமராவதி கூறுதல்)

'

‘அம்பி’ எனப்பொறுத் தருள வேண்டுவல்
இம்பர் இருவரும் இணைந்த துறுதி
மறுமையும் இணைவோம் மாற்றம் வேறிலை
பொறுமைப் பண்பைநாம் போற்ற வேண்டுமால்
கிணற்று நீரைக் கொள்ளுமோ வெள்ளம்?


28. அஞ்ஞான்ற- அப்போது. 31. தேன்மொழி - அமராவதி. 38. கட்செவி - பாம்பு. 39. உட்கல் - அஞ்சுதல்; பொருட்டு - காரணம். 41. அமரு - அமராவதி. 45. உலறிய - கோபக் குறிப்புக் கொண்ட 46. அம்பி - அம்பிகாபதி. 47. இம்பர் - இவ்வுலகம்.