பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதலர் உரையாடு காதை

67

இருமணம் ஒன்றா யிணைந்த போதினும்
திருமணம் முடித்துடல் தீண்டலே நன்றென,

(அம்பிகாபதி)

எம்மொழி யிலுமிலா அகப்பொருள் இலக்கணம்
நம்மொழி பெற்றதை நனிமறந் தனையோ?

55 களவு முன்னதாய்க் கற்புப் பின்னதாய்
அளவு செய்துநம் அகப்பொருள் கூறும்.
களவிற் பெற்றிடும் காதற் சுவையினைக்
குலவு கற்பிற் பெறுதல் கூடுமோ?
என்றவன் வினவ, இன்மொழி விடுப்பாள்:

(அமராவதி)

50 “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்” என்பது குறள்.
உணர்ச்சி யொன்றே உருக்கம் தருமால்
புணர்ச்சி செய்திடின் போய்விடும் ஆர்வம்
எட்டி யிருப்பினே எழுச்சியும் இருக்கும்

65 கிட்டி விடினோ கிளர்ச்சி மங்கிடும்
கட்டித் தழுவினோ கவர்ச்சியும் குறைந்திடும்.
பழகப் பழகப் பாலும் புளிக்குமென்
றழகாய்ப் பெரியோர் அறைந்ததோ ரீரென,

(அம்பிகாபதி)

புணர்ச்சி பழகுதல் வேண்டுமோ, பொருந்தும்

70 உணர்ச்சி போதுமென் றுரைத்து வள்ளுவர்
நட்புக் கிலக்கணம் நவின்றுளார்; காதல்
பெட்புக் கிஃது பேதாய் பொருந்துமோ?

55. களவு - களவுப் புணர்ச்சி, கற்பு - மணந்தபின் புணர்ச்சி. 59. இன்மொழி - அமராவதி. 61. கிழமை - உரிமை, 68. அறைந்தது ஒரிரோ - சொல்லியிருப்பதை ஆய்ந்துணர்க. 73. பேதாய்-பெண்ணே.