பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அம்பிகாபதி காதல் காப்பியம்

நன்னர் ஆகென நம்பி நவில,
ஆண்டவ் விருவரும் ஆவன சூழ்ந்தபின்

110 ஈண்டு மீண்டும் இருவரும் வந்து
காண்டு மென்று கட்டினர் நடையை.
இலவங் காத்தே ஏமாந்த கிள்ளைபோல்
புலவன் அம்பிகாபதி போக நேர்ந்ததே.
படர்ந்திடக் காமம் பாய்ச்சும் கருவேள்

115 தொடர்ந்ததன் முயற்சியில் தோல்வி கண்டதால்
கருப்பு வில்லையும் கணைமலர் களையும்
வெறுப்பொடு கீழே வீசி யெறிந்தனனே.

111. காண்டும் - காண்போம்; கட்டினர் நடையை - நடையைக் கட்டினர் - சென்றனர். 112. இலவம் - இலவம் பஞ்சுக் காய்; கிள்ளை - கிளி. 114. கருவேள் - மன்மதன். 116. கருப்பு - கரும்பு; கணை - அம்பு.