பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10. அமைச்சன் அரசனொடு சூழ்ந்த காதை

அம்பிகா பதியும் அமராவதியும்
கொம்பும் சுற்றிய கொடியும் ஏய்ப்பக்
கன்னி மாடக் காவினுள் மறைவாய்த்
துன்னிக் கலப்பதாய்த் தாரகை தூற்றக்

5 காடவன் கேட்டுக் கனன்று, காதல்
வேடுவன் அம்பிகா பதியை வீழ்த்துவன்
என்று சூளுரைத் தேகினன் அரண்மனை;
வென்றி வேலுடை வேந்தனைக் கண்டு
தாரகை தந்த தகவலைப் பெருக்கி

10 ஓர உரைத்தே உணர்ச்சியைக் கிளறினன்.

(மன்னன் உரைத்தல்)

மன்னன் கேட்டு மாற்றான் அம்பிகாபதி
இன்னும் உயிரோ டிருப்பதைப் பொறேஎன்;
முன்னர் அவர்தம் முயக்கம் ஆய்ந்த கொன்னே
பின்னரே இருவரும் கொலைசெயப் பெறுவர்.

15 காடவ! என்மகள் களங்கம் இலாதாள்
ஆடவன் ஒருவற் கடிமைப் படாஅள்
கொன்னே அவள்மேல் குற்றம் சாட்டுதல்
என்னே வாட்டுமால் என்னினிச் செய்குவல்!
எதனைச் சான்றாய் ஏற்றுநாம் முற்றும்
 
20 இதனை நம்புதல் இயலும் என்ன,

(கடவன் கூறுதல்)

அண்ணலே நும்மகள் அமரா வதியைக்
கண்ணை யிமைபோற் காக்கும் என்மகள்

2. ஏய்ப்ப - போல. 10. ஓர - உணர. 18. முயக்கம் - புணர்ச்சி.