பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அம்பிகாபதி காதல் காப்பியம்


சொன்னதே சான்று சூளுரைப் பேனியான்;
மாட்சி யுறும்நும் மகளின் செயலைக்

25 காட்சி யளவையிற் கண்டே கூறினள்,
ஐயம் உளதேல் ஆய்வுசெய் திடுவோம்;
வையம் உறங்கும் வேளை வந்ததும்
பையக் கன்னி மாடக் காவினுள்
இன்று நள்ளிரா இருவரும் செல்வோம்;

30 நன்று காண்போம் நடப்பதை யென்ன,

(வேந்தன் விளம்புதல்)

நல்லது, செய்வோம், நாமே ஆய்வோம்;
இல்லதும் உள்ளதும் இன்றிரா விளங்கிடும்.
தாரகை மொழிந்தது தவறா யிருப்பினும்
நீரதை மெய்யென நிறுவவே முயலுவீர்

35 முயற்சி தோற்பின் முழுப்பெரும் பழிக்குப்
பொறுப்பு நீருமும் பொல்லா மகளுமே!
தாரகை தலையொடு நுமது தலையும்
பாரக மீது பதைபதைத் துருளும்
இந்த ஆணையை ஏற்ப தாகச்

40 செந்தமிழ் ஆணையாய்ச் செப்பிடு வீரென,

(காடவன் கழறல்)

என்மகள் தாரகை இல்லாப் பழிநும்
பொன்மகள் மீது பொருத்திக் கூஉறாள்.
தமிழ்மீ தாணை தமிழர்மீ தாணை
இமிழ்கடல் உலகின் இறைமீ தாணை

45 சென்றுநாம் இன்றிராச் செய்குவம் ஆய்வு.
கன்றுந் தவறு காண விலையெனின்

35. காட்சியளவை - நேரில் கண்டு அளந்து தீர்மானிப்பது. 28. ஐயம் - சந்தேகம். 37. வையம் - உலகம் - உலகத்தார். 34. நிறுவவே - நிலைநாட்டவே. 38. பாரகம் - தரை. 44. இறை - கடவுள். 48. கன்றும் - சினங் கொள்ளத்தக்க.