பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காதை

நள்ளிரா வேளை நண்ண ஐயம்
கொள்ளும் அமைச்சனும் கொற்றவன் சோழனும்
புதியரேய் மாற்றுக் கோலம் புனைந்து
பதியும் காலடி ஒலியும் படாமல்

5 கன்னி மாடக் காவகப் பக்கல்
நண்ணினர் மிகவும் மெல்ல நடந்தே.
ஆங்கொரு புதரை அமைச்சன் காட்டி
ஈங்குநாம் மறைவா விருக்கலா மென்று
குறிப்பா யுணர்த்தக் கொற்றவன் அவனொடு

10 மறுப்பே யின்றி மறைந்திருந் தனனே.
குடக்கி லிருந்தோர் உருவம் குறுக
வடக்கி லிருந்தொரு வடிவம் வந்தது.
இரண்டும் போர்த்தும் முக்கா டிட்டும்
மிரண்டு மிரண்டு மெல்ல நடந்தன.

15 கண்கள் மட்டும் காணத் தெரியத்
தண்டலை நோக்கித் தரையில் நகர்ந்தன.
நெருங்கிய நிலையில் நின்ற போது
மருங்குறு அமைச்சன் மன்னனை நோக்கி,

(அமைச்சன் கூறுதல்)

அடியேன் கூறிய அனைத்தும் உள்ள

20 படியே நடப்பதைப் பாரீர் இனியுமெந்
தலைகள் உருளத் தகுமோ கூறிர்
தலைதனைத் தாழ்த்தி வணங்குவல் என்ன,

3. ஏய் - போன்ற, 5. பக்கல் - பக்கம். 11. குடக்கு மேற்கு. 18. தண்டலை - சோலை. 18. மருங்கு - பக்கம்.