பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அம்பிகாபதி காதல் காப்பியம்

வாய்ந்த வாய்ப்பை வழுவ விடாஅமே
அஞ்சு மணித்துளி நேரம் ஆகியும்
அஞ்சுத லின்றி அணைத்தே யிருக்கவே,

50 மஞ்சுறு மன்னன் மானம் பொருஅனாய்ப்
பழித்த படியே பாய்ந்தவர் தலையின்
இழுத்துமுக் காட்டை எறிந்தனன் கீழே.
அமைச்சர் மக்கள் அண்ணனும் தங்கையும்
அமைத்த சிலபோல் ஆங்குநின் றிருந்தனர்.

55 ‘அண்ணா’ என்றே அலறினாள் தாரகை;
‘தங்கையே’ என்று தவித்தனன் சிம்மன்.
தேளது கொட்டிய திருடனைப் போலவும்
ஆடு திருடிய கள்ளி ஆரவும்
இருவரும் பெரியோர் இருவரைக் கண்டதும்

60 அருவருத் தஞ்சி அழுதனர் தேம்பி.
நாடி தளர்ந்துடல் நடுங்க நாணொடு
காடவன் கண்டு தன்தலை கவிழ்த்தனன்;
மூடரும் இப்பழி மூண்டதெவ் வாறெனத்
தேடினன் பொருட்டு; தெரியாது திகைத்தனள்,

65 மன்னனைத் தொழுதனன்; மானமீக் கூர
என்ன செய்வேன் என்று தேம்பினன்,
அழுவதா சிரிப்பதா? அறியா அரசன்
தழுவி யமைச்சனைத் தணிவு செய்தனன்.

(அரசன் கூறுதல்)

அணைக்கு முன்பே அவர்தம் உறவைத்

70 துணிக்க முயன்றேன் துணிவு பெறாஅநீர் தடுத்தீர் அதனால் தழுவினர் இருவரும்;

50. மஞ்சு - மைந்து - வலிமை. 51. தலையின் - தலையிலிருந்து. 58. ஆரவும் - போலவும். 61. நாணொடு - நாணத்துடன். 64. பொருட்டு - காரணம். 65. மிக்கூர - அதிகப்பட. 68. தணிவு - ஆறுதல்.