பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12. அரசன் அமைச்சனை அழைத்த காதை

தன்னுறு மக்களாம் தாரகையும் சிம்மனும்
இன்னலும் இழிவும் ஏற்கும் வண்ணம்
அமராவதியும் அம்பிகா பதியும்
ஓர்ந்து திட்டம் உளவாய்த் தீட்டிச்
5சேர்ந்து புரிந்த செயலே யிஃதாம்;
பழிக்குப் பழியான் வாங்குவன் பார்க்கென
அழிகுணக் காடவ அமைச்சன் சூழ்ந்துழி
அரசன் அழைப்பதாய் ஆள்வந் துரைப்ப
உரைசெய ஒன்றிலை ஓடி வருவனென்
10 றமைச்சன் வேந்தனை அடைந்து வணங்க,
அமைச்சனை நோக்கி அரசன் அறைவான்:

(அரசன் கூறல்)


கன்னி மாடக் காவகந் தன்னில்
முன்னிராக் கண்டது முற்றும் எண்ணுக.
தாரகை அம்பிகா பதியை அடையவும்
15 சிம்மன் அமரா வதியைச் சேரவும்
உளத்தில் வரித்தது உண்மை யென்பதைக்
களத்தில் நின்றே கண்டனம் நாமே.
அண்ணனும் தங்கையும் அனைத்துச் சுவைத்தது
விண்ணுறு வியப்பாம்; விளம்புதி மாற்றம்
20 இருவரும் இங்ங்னம் இயற்றிய இழிசெயல்
ஒருவத் தக்கது ஒர்ந்து காண்கென,


2. இன்னல் - துன்பம். 4. ஒர்ந்து - ஆராய்ந்து. 16. வரித்தது . மணக்க எண்ணியது. 19. விளம்புதி - சொல்லுவாய்; மாற்றம் . பதில். 21. ஒருவத்தக்கது - நீக்கவேண்டியது.

அ.-6