பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13. காதலர் பாராட்டுக் காதை,

 

அரிவையர் ஆண்மையை அவாவும் வண்ணம்
தெரிவுறும் பேரெழில் திகழ்ந்து சிரிக்கும்
அமரா வதிதன் அகத்துள் எண்ணினள்:
இன்றிராக் காண்பதாயம்பிகா பதியிடம்

5அன்றுநாள் குறித்தேன் அவ்வணம் இன்றிரா
சேவகர் எவரும் சிறிதும் அறியாமே
காவகம் போந்து காண்டல் வேண்டுமால்.
அன்றென் கையை அவர்தொட முயன்றார்
கொன்ருற் போலக் கூவி அலறினேன்.

10அதனல் அவர்முகம் கறுத்த தறிந்தேன்
முதனாள் முயற்சியில் முற்றும் தோற்றார்.
என்னைக் குறித்தவர் என்ன நினைப்பரோ!
தன்னை ஏய்க்கும் தாடகை என்பரோ!
ஆசை காட்டி மோசம் செய்தல்

15என்னும் பழமொழி இதற்குப் பொருந்துமே.
மோக்கக் குழையனிச் சத்தினும்
முரணாய் நோக்கக் குழையும் விருந்தெனும் நுண்மையை
நோக்கிலேன் அவரை நோகச் செய்தேன்.
நற்றமிழ் அறிஞரை நானன் றேய்த்தது

20குற்றம் குற்றம் பெரிய குற்றமே!
இன்றுயான் அவர்தொட இசைவது உறுதி.
அன்றுயான் மறுத்ததால் அவரெனை முதலில்
தொடுதல் செய்யார் தோல்விக் கஞ்சுவர்.
கெடுதல் ஒன்றிலை கிட்டியான் தொடுவேன்.

25ஆமது முதலில் அவரை யான்தொடின்


1. அரிவையர்- பெண்கள்; அவாவுதல் - விரும்புதல். 3. பேரெல் - பேரழகு. 3. அகம் - மனம். 16. அனிச்சம் - மோந்தாலே வாடும் ஒருவகை மலர்.