பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


“செந்தமிழ் ஆற்றுப் படை”

சிறப்புப் பாயிரம்

பேராசிரியர், நீதிவாதி, நாவலர், இளசைக் கிழார், உயர்திரு ச. சோம சுந்தர பாரதியார், M. A., B. L.

அவர்கள் அருளியது:


"சுதை இயற்கவி சுந்தர சண்முகர்
புதுவைப் பாவலர் புதிது புனைந்துள
அதுலச் ‘செந்தமிழ் ஆற்றுப் படை’வெகு
மதுர மார்தமிழ் வாய்மைக் கவிதையாம்;
சதுரம் வாய்ந்தது தமிழொடும் வாழ்கவே."


குறிப்பு : சுதை - அமிழ்து. அதுலம் - இணையின்மை. மதுர கவி - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனக் கவி நான்கு வகையுள் ஒன்று.


நாவலர், ச. சோமசுந்தர பாரதி


(கையொப்பம்)



குறிப்பு : 'அம்பிகாபதி காதல் காப்பியம்` நூலின் ஆசிரியர் சுந்தர சண்முகனாருக்கு அளிக்க, ‘இயற்கவி’ என்னும் சிறப்புப் பட்டம் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரால் பரிந்துரைக்கப்பெற்றது என்பதற்குச் சான்றாக மேலுள்ள பகுதி தரப்பெற்றுள்ளது. ஆசிரியருக்கு இந்தப் பட்டத்தைப் புதுச்சேரி கல்விக் கழகம் அளித்ததை அறிவிக்கும் ‘சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழ்’ அடுத்த பக்கத்தில் தரப் பெற்றுள்ளது.