பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அம்பிகாபதி காதல் காப்பியம்


தொடுப்பு

40 (1)அல்லும் பகலுமே அயராது கண் விழித்தே
செல்லல் பாராது சேயினைக் காத்தே
நல்ல மகவாய் நலமுற உருவாக்கும்
தெய்வமும் வேறும் உண்டோ

பெற்றோரினும் பெரிய
(தெய்வமும்)


45 (2) குழந்தையின் மேனியில் கொசுகொன்று மொய்க்கினும் தழைந்ததம் கண்ணில்முள் தைத்ததாய் நொந்திட்டே
குழைந்துளம் விசிறிகைக் கொண்டே விசிறிடும்
தெய்வமும் வேறும் உண்டோ

பெற்றோரினும் பெரிய
(தெய்வமும்)


50 (3)மகவின் நலத்துக்காக மருந்து தானுண்டு
தகவாய்ப் பத்தியமும் தான் பிடித்தே வருந்தி
மகவின் நோய் போக்கி மகிழ்ந்து கொஞ்சிடும்
தெய்வமும் வேறும் உண்டோ

பெற்றோரினும் பெரிய
(தெய்வமும்)


55 (4)குழவியின் மெய்தீண்டிக் 'குளுகுளு' என மகிழ்ந்தும்
மழலை மொழிகேட்டும் மக்கள் பிசைந்ததுண்டும்
குழலையும் அமிழ்தையும் குறைவாய்க் கருதிடும்
தெய்வமும் வேறும் உண்டோ

பெற்றோரினும் பெரிய
(தெய்வமும்)


60 (5)அவையதிலே முந்தி அமரச் செய்திடவே
நவையறு நற்கல்வியை நல்கி முன்னேற்றியே
புவியெல்லாம் பிள்ளையின் புகழ்மணக்கச் செய்திடும்
தெய்வமும் வேறும் உண்டோ -

பெற்றோரினும் பெரிய
(தெய்வமும்)

40. அல் - இரவு. 41. செல்லல் - துன்பம். 47. உளம் - .மனம். 50. மகவு - குழந்தை. 55 குழவி - குழந்தை. 56. மழலை மொழி - குழந்தையின் நிரம்பாத கொஞ்சும் பேச்சு 57. குழல் - புல்லாங்குழல், 60. அவை - சபை. 61. நவை - குற்றம். 62. புவி - பூமி.