பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

அம்பிகாபதி காதல் காப்பியம்



 

உண்மையை வேந்தன் உரைப்பவன் போலத்
திண்மையாய் உள்ளம் திறந்து பேசுவான்:
அமரா வதியே அன்ருெரு நாளிரா

95சிம்மனும் தாரகைச் சிறுக்கியும் வந்து
நம்முடைக் கன்னி மாடக் காவினுள்
ஒருவரை யொருவர் மாறி ஓர்ந்தே
இருவரும் ஒருவராய் இறுகத் தழுவினர்;
அஃதுன் திருவிளையாட லாமென

100அறிந்தேன்; இச்செயல் ஆற்றுதல் முறையோ?
தெரிந்திடக் காரணம் தேர்ந்து கூறென,

(அம்பிகாபதி)


சிம்மன் ஓரிரா வந்து செய்ததை
விம்மக் கூறி, விளக்கும் சான்றாய்
அன்னையைக் காட்டிட, அவளும் சிம்மனின்

105அன்னையொடு கண்டதாய் அறிவித் தனளே.
பாலுக்குங் காவலாய்ப் பூனைக்கும் தோழியாம்
தாரகை யொழுகும் தரமும் நன்றிலை; எனவே,
தந்தையே! சிம்மனும் தாரகைச் சனியனும்
வெந்து வெதும்ப வேடிக்கை செய்தேன்

110எந்தாய் இதில்பிழை இருப்பின் பொறுக்கென,

(அரசன்)


அரசன் கூறுவான்: அஃது கிடக்க!
அம்பிகா பதியும் அமரா வதியும்
உடலுறவு கொண்டனர் என்பதாய்ச் சில்லோர்
கடலுறக் கூறுவ துண்மையோ சொல்லென,


97. ஓர்ந்து - உணர்ந்து. 110. எந்தாய் - எம்தந்தையே. 114. கடலுற - உள்ளம் சுடும்படி.