பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி பெற்றோரொடு அளவளாவிய காதை

97

(அமராவதி)

115 எந்தாய் பெரும்பழி இதற்கென் செய்குவல்,
அந்த அம்பிகா பதியின் உடலை
என்னுடல் தொட்டது இல்லவே யில்லை;
என்னுடைப் பெற்றோர் ஆணையென் றியம்ப,

(அரசன்)

உடல்தொட் டதில்லை உள்ளம் தொட்டதோ?

120 மக்கள் மகிழ மணஞ்செய் விப்பதாய்ப்
பாடிய பாப்பொருள் யாதோ பகரென,

(அமராவதி அன்னையை நோக்கி)

பாரம்மா அப்பாவை என்று பசப்பினாள்.

(அரசி)

குழந்தை யின்மேல் குற்றம் எதாவது
அழுந்தக் காண்பது அழகோ நமக்கென
அன்னை கடியவே அரசன் சிரித்தனன்,
பின்னர் இருவரும் பெரிதும் வாழ்த்திக்
கன்னி மாடம் கடந்துசென் றனரே.


115. செய்குவல் - செய்வேன். 181. பாப் பொருள் - பாட்டின் பொருள்.

அ.—7