பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அம்புலிப் பயணம்

பெறும் பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் மிகவும் பேர்போனவை. தமிழ் இலக்கியத்தில் இத்தகைய பாடல்கட்கு முதன் முதலில் வித்திட்டவர் தாயுள்ளம் படைத்த பெரியாழ்வார் என்ற வைணவப் பெரியார். தான் யசோதைப் பிராட்டியாக நின்று பேசும் தேனூறும் பாடல்கள் சிந்தைக்கும் செவிக்கும் வாய்க்கும் அமுதாகத் தித்திக்கின்றன.

ஒருநாள் மாலை நேரம். தெற்றியில் சுட்டி அசையத் தவழ்ந்து போகின்றான் கண்ணன் என்ற குழந்தை; இடுப்பில் -சதங்கைகள் 'கிண்கின்' என்று ஒலிக்கப் போய்ப் புழுதி அளைகின்றான். "என்னடா கூத்து, கையெல்லாம் புழுதியாக்கிக் கொண்டு?“ என்று சொல்லிக் கொண்டே குழந்தையின் குறும்புச் செயல்களில் குதூகலம் அடைந்தவவாளாகிறாள் யசோதை. இந்திலையில் வானத்தில் சந்திரன் தோன்றுகின்றான்; அன்று பௌணமி. சந்திரனைக் கண்டதும், "அடே சந்திரா, கண்ணனின் கூத்தை நீயும் பார்க்க வந்து விட்டாயா? நல்லது, பார்த்துப் போ“ என்கின்றாள் தாய்.

புழுதியைத் துடைத்துக் குழந்தையை ஒக்கலில் வைத்துக் கொள்கின்றாள் யசோதை. வத்துக் கொண்டதும் அமுதபானம் செய்தது போல் ஆனந்த வெறி ஏற்படுகின்றது அன்னைக்கு. "எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்“ என்று பூரித்துப் போகின்றாள். சந்திரனைக் கண்டதும் கண்ணன் கைகளை நீட்டுகின்றான், "என் செல்வம். என் சிறு குழந்தை, தன் அருமைச் சிறு கரங்களைக் காட்டி அழைக்கின்றான் ; இரண்டு கைகளாலும் அழைக்கின்றானே! எத்தனை தரம் அழைக்கின்றான், பார்! 'விளையாட வா“ என்று அழைக்கின்றான். ஏ, சந்திரா ! உனக்கு ஆசை இல்லையா, இவனோடு விளையாடுவதற்கு?“ என்று கொஞ்சுகின்றாள் ; கெஞ்சவும் செய்கின்றாள். குழந்தையும் தன் மழலை முற்றாத இளஞ் சொல்லால் 'அம்புலி அம்மா! வா, வா!“ என்று கொஞ்சி அழைக்கின்றான் சந்திரனை.

இந்தச் சமயத்தில் சந்திரன் மேகத்தினுள் மறைந்து போகின்றான். உடனே யசோதை.