பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அம்புலிப் பயணம்


கடந்த பதினைந்து ஆண்டுகளாக மனிதன் சந்திரனுக்கும் போய்த் திரும்பிவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றான். 1968ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் திருநாள் அன்று அமெரிக்காவின் மூன்று விண்வெளிவீரர்கள் அப்போலோ-8 என்ற விண்வெளிக் கப்பலில்[1] சென்று சந்திரனுக்கு 111 கிலோ மீட்டர் அருகில் இருந்து கொண்டு அதனைப் பத்துத் தடவைகள் வட்டமிட்டுத் திரும்பினர். அடுத்து இயக்கப் பெற்ற[2] அப்போலோ-9 சந்திரனில் இறங்கும் ஒத்திகையின் ஒரு பகுதியை வெற்றியுடன் செய்து முடித்தது. சந்திரனின் தரையில் இறங்குவதற்கென்று அமெரிக்கா உருவாக்கியுள்ள அம்புலி ஊர்தியைத் (Lunar Module) தாய்க் கலத்தினின்றும் பிரிப்பதும் பின்னர் இணைப்பதுமான, சோதனை பூமியின் சுற்று வழியிலேயே செய்யப்பெற்றது. ஆயினும், சந்திரனில் இறங்கும் பொழுது செய்ய வேண்டியனயாவும் இச் சோதனையில் செய்து பார்க்கப் பெற்றன. அப்போலோ-10 பயணத்தில்[3] அப்போலோ-II பயண விண்வெளி வீரர்கள் - பாதுகாப்பாக இறங்க வேண்டிய நல்ல இடம் கண்டறியப் பெற்றது. அடுத்து மேற்கொள்ளப்பெற்ற அப்போலோ-11 பயணத்தில்[4] பயணத்தின் ஆறாம் நாள் (சூலை - 21} விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் முதன் முதலாகத் தன் காலடியை வைத்து அம்புலியில் இறங்கி "அம்புலியின் முதல் மனிதன்" என்ற அழியாப்புகழ் பெற்றார். இந்த மாபெரும் நிகழ்ச்சி நிறைவேறுவதற்கு மானிட இனம் மேற்கொண்ட முயற்சிகளைப்பற்றி அடுத்துவரும் இயல்களில் காண்போம்.


  1. 1968-ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் இயக்கப்பெற்றது.
  2. 1969ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 3 ஆம் நாள்.
  3. 1969ஆம் ஆண்டு மேத் திங்கள் 18-ஆம் நாள்.
  4. 1989 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 16ஆம் நாள் தொடங்கப் பெற்றது.