பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அம்புலிப் பயணம்

விநாடிக்குச் சில கிலோமீட்டர் தொலைவாகும். விண்வெளி விமானிகள் இத் துகள்களைப் பிடித்துப் பூமிக்குக் கொணர்வர்.

7. அண்டக்கதிர் ஆய்வு : அண்டக்கதிர்கள் (Cosmic rays) என்பவையும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் (விநாடிக்கு 2,97,600 கி.மீட்டர்கள் ) பாயும் நுண்துகள்களே பெரும்பாலும் இவை புரோட்டான், ஆல்ஃபாத் துகள்களாகும். அண்டக் கதிர்கள் கதிரவ மண்டலத்திற்குப் புறத்திலிருந்தே வருகின்றன; ஆனால், அவை எங்கிருந்து வருகின்றன என்பது விளங்கா வியனுலகப் புதிராகவே உள்ளது. இவற்றை அம்புலித் தரையில் கண்டறியச் சோதனைகள் மேற்கொள்ளப் பெறும்.

8. அம்புலியின் நில உட்கூறு ஆய்வு : விண்வெளி விமானிகள் தாங்கள் சென்று இறங்கும் 'டெஸ்கரேட்டஸ்' என்ற பகுதியில் நில உட்கூறு எங்ஙனம் உளது என்பதனை ஆய்ந்து அங்குள்ள மண், கல் முதலியவற்றில் வகைக்கு ஒன்றிரண்டு எடுத்து வருவர்.

9. அம்புலி மண் ஆய்வு : அம்புலி மண்ணின் இயங்கு இயல்புகளை ஆராயத் தரையில் அமிழ்ந்து தானே பதிவு செய்துகொள்ளும் கருவி ஒன்றினைப் பயன்படுத்துவர்.

அப்போலோ - 16 விண்வெளிக் கப்பலின் எட்டுக்கால் பூச்சி வடிவுள்ள 'ஓரியன்' என்ற அம்புலி ஊர்தி முதலில் திட்டமிட்டதற்கு 5 மணி 42 நிமிடம் தாமதமாக அம்புலியின் மலைப்பகுதியில் பாதுகாப்பாக இறங்கியது. இந்த ஊர்தியிள் மூலமாக மனிதன் ஐந்தாவது முறையாக அம்புலியில் காலடி வைக்கின்றான். அப்போலோ - 16 கப்பல் 16ஆவது முறையாகச் சந்திரனை வலம் வந்து கொண்டிருந்த பொழுது ஜான் யங்கும் சார்லஸ் டியூக்கும் இறங்கத் தொடங்கினர். 'ஓரியன்' அம்புலியின் மேற்பரப்பைத் தொட்டதும் அதன் சாம்பல் நிறத் தூசு பறந்தது அம்புலி ஊர்தியில் சென்றவர்கள் சோதனைகளை முடித்துத் திரும்பும் வரையிலும் 'காஸ்பர்' என்ற தாய்க்கப்பல் அம்புலிக்கு 106 கிலோ மீட்டர்