128
அம்புலிப் பயணம்
றத்தைப் பற்றியும் அதன் பூ இயல் பற்றியும் அறிவதற்கு இந்த இடத்தில் சேகரிக்கப்பெறும் கற்கள் பெரிதும் உதவக் கூடும் என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர்.
மேற்கண்ட இடத்தில் தேவையான அளவு பல்வேறு விதக் கற்களைச் சேகரித்துக் கொண்டு அம்புலி வீரர்கள் தங்கள் ஜீப்பில் 'புகைமலை' என்ற இடத்திற்குச் சென்றனர். இஃது எரிமலைக் குழம்பு உறைந்ததன் காரணமாக 400 கோடி யாண்டுகட்கு முன் உண்டான மலையாக இருக்கும் என்று கருதப் பெறுகின்றது.
அம்புலிச் சோதனைகளை முடித்துக் கொண்டு ஜான் யங்கும் சார்லஸ் டியூக்கும் அம்புலி ஊர்தியில் ஏறித் தாய்க் கப்பலை அடைந்தனர். அதன் பிறகு மாட்டிங்கிலி இரண்டு பணிகளை நிறைவேற்றினார்.
முதலாவது: 7.5 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் தாய்க் கப்பலுடன் பிணைக்கப் பெற்றிருந்த அவர் தாய்க் கப்பலின் பின்புறத்தில் காமிராக்கள் வைத்திருந்த பகுதிக்குச் சென்று அந்தக் காமிராக்களிலிருந்த ஃபிலிம் சுருள்களை எடுத்து வந்து தாய்க்கப்பலுக்குள் கொண்டுவந்து சேர்த்தார். அம்புலியின் பல்வேறு பகுதிகளைப் படம் பிடித்து வைத்திருந்த அந்தச் சுருளின் நீளம் சுமார் 16 கி.மீ. இருக்கும். பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத அம்புலியின் பின்புறப் பகுதியையும் அந்த ஃபிலிமில் பார்க்கலாம்.
இரண்டாவது : மாட்டிங்கிலி - நிறைவேற்றிய அடுத்த பணி இது. சுமார் ஆறு கோடி நுண்ணணுக்கிருமிகள் (Backtria) அடங்கிய ஓர் உறையைத் திறந்து அதன்மீது சூரியனின் கதிர் இயக்கம் படியும்படி காண்பித்தார். பகலவனின் கதிர்வீச்சினால் இந்த உயிர்கள் எவ்வாறு பாதிக்கப் பெறுகின்றன என்பதைக் கண்டறிவுதே இதன் நோக்கம். இந்த இரு பணிகளும் நிறைவேற 62 நிமிடங்கள் ஆயின.
மாட்டிங்கிலியின் விண்வெளி உலா தொலைக்காட்சியில் காட்டப் பெற்றது. இதுகாறும் அம்புலி ஊர்தியில் சென்ற