30
அம்புலிப் பயணம்
{Frientlsilip-7) என்ற விண்வெளிக் கலத்தில் இருக்கச் செய்து[1] அக் கலத்தை மூன்று அடுக்கு அட்லாஸ் {Atles) என்ற இராக்கெட்டால் இயக்கினர். அவர் அமர்ந்திருந்த கலத்தின் எடை சுமார் இரண்டு டன் ; கலத்தினை இயக்கின இராக்கெட்டின் உந்து வீசை 3,60,000 பவுண்டு. சற்றேறக் குறைய ஐந்து நிமிடங்களில் விண்வெளிக் கலம் பூமியின் சுற்று வழியை அடைந்தது. பூமியை மூன்று முறை வலம் வந்தார். அதன் பின்னர் அவர் பின்னியங்கு இராக்கெட்டுகளை இயக்கினார் ; கலம் கடலில் வந்திறங்கியது. அங்கிருந்து அவர் மீட்கப் பெற்றார்.
இவரை கழித்து ஸ்காட் கார்ப்பெண்டர் (Scott Carpeular) என்பார் அரோர-7 என்ற விண்வெளிக் கலத்தில் அனுப்பப்பெற்றார்.[2] அமெரிக்காவின் இரண்டாவது விண்வெளி வீரரான இவர் சென்ற தலத்தினை அட்ரைஸ்-D என்ற மூன்றடுக்க இராக்கெட்டு இயக்கியது. இந்த வீரர் பல அரிய ஆராய்ச்திகளில் ஈடுபட்டார். இவர் இரண்டாவது முறை பூமியை வலம் வந்த பொழுது கலம் சாயாமல் செல்லுவதற்காகப் பயன்படும் ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு (Hydrogen peroxids; என்ற திரவம் எதிர்பாராத விதமாகத் தீர்ந்துவிட்டது. இத் தகவலைப்பூமியில் இருக்கும் அறிவியலறிஞர்கள் அறிவித்து இரண்டு சுற்றோடு பூமிக்குத் திரும்பி விடுமாறு கட்டளை பிறப்பித்தனர். ஆனால் வானொலித் தொடர்பு தடைப்பட்டது. இதனால் அவர்கள் கார்ப்பெண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியாமல் 53 நிமிடங்கள் வரை கவலை கொண்டிருந்தனர் . எண்ணற்ற கப்பல்களும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அட்லாண்டிக் மாபெருங்கடலில் அவரைத் தேடித் திரிந்தன. இறுதியாக ஒரு ஹெலிகாப்டர் விமானம் கடலில் ஒரு கூண்டு மிதந்து கொண்டிருப்பதையும் அதன் அருகில் ஓர் உயிர்ப்படகின் மீது ஒருவர் அமர்ந்திருப்பதையும் கண்டது. உடனே கார்ப் பெண்டர் அங்கிருந்து மீட்கப் பெற்றார்.