பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அம்புலிப் பயணம்

எதிர்காலத்தில் மனிதன் அம்புலியில் இறங்கும் பயணத்தில்

படம் 9 : அப்போலோ - 8 பயணத்தில் பயன்படுத்தப்பெற்ற விண்வெளிக்கலம்

எத்தகைய இராக்கெட்டு பயன்படுத்தப்பெறுமோ அத்தகைய இராக்கெட்டே இப்பயணத்தில் பயன்படுத்தப் பெற்றது. அங்ஙனமே, எந்த மாதிரியான விண்வெளிக் கலம் அப்பயணத்தில் பயன்படுத்தப் பெறுமோ அத்தகைய கலமே இப் பயணத்திலும் மேற்கொள்ளப்பெற்றது. ஆனால், அம்புலி ஊர்தி (LEM-Lunar Excursion Module) என்ற ஒரு பகுதி மட்டிலும் இதில் பொருத்தப் பெறவில்லை. இந்த அம்புலி ஊர்திதான் சந்திரனைச் சுற்றி வரும் மனிதனைச் சந்திரனுக்குக் கொண்டு செல்லும்.

சாட்டர்ன் - 5 : அப்போலோ - 8 என்ற விண்வெளிக் கலத்தை விண் வெளிக்கு உந்தியது சட்டர்ன் - 5 (Satum - 5) என்ற இராக்கெட்டு ஆகும். இஃது