பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அம்புலிப் பயணம்

தடவை சுற்றி வருவதற்குள் விண்வெளி வீரர்கள் கலத்தில் எல்லாச் சாதனங்களும் சரியாக இயங்குகின்றனவா என்று சோதித்துக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் மூன்றாவது அடுக்கு இராக்கெட்டினை இயக்கினர். அதிலுள்ளது ஒரு பொறியே. அஃது அம்புலியை நோக்கி இவர்களை இட்டுச் சென்றது. சிறிது தூரம் சென்றதும் அதன் ஆற்றல் தீர்ந்து போயிற்று இராக்கெட்டும் தனியே கழன்று கொண்டது. எனினும், விண்வெளிக் கலத்தின்

படம். 10 : அப்போலோ-8 இன் படிப்படியான சுற்று வழிகளைக் காட்டுவது

வேகம் தனியாமல் சென்ற வேகத்திலேயே அது மேலும் 3-2 இலட்சம் கிலோ மீட்டர்களைக் கடத்து அம்புலியை நெருங்கத் தொடங்கியது.