பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.9. அப்போலோ-9

னிதன் சந்திர மண்டலத்திற்குச் செல்லுவதற்கு முன்னர் மேலும் சில சோதனைகளை விண்வெளியில் செய்து பார்த்தல் வேண்டும். ஐம்பது டன் எடையுள்ள அப்போலோ-9 கலம்[1] முழுவதையும் முதல் தடவையாக விண்வெளியில் சோதிப்பதே அப்போலோ 9 விண்வெளிப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக அம்புலியில் இறங்குவதற்குப் பயன்படப் போகும் அம்புலி ஊர்தியின் (Lunar Module) செயல்திறனை நன்கு சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். விண்வெளி வீரர்கள் தங்கும் பகுதியாகிய கட்டளைப் பகுதி (Command Modle ), தளவாடங்களும் கருவிகளும் அடங்கிய பகுதி. (Service Module), நான்கு கால்களைக் கொண்ட அம்புலி ஊர்தி ஆகிய மூன்று பகுதிகளும் அடங்கியதே அப்போலோ.9 என்ற விண்வெளிக் கலம் ஆகும்.

இராக்கெட்டு தளத்தில் இந்த விண்கலத்தைச் சுமந்து நிற்கும் இராக்கெட்டும் கலமும் சேர்ந்து 109 மீட்டர் உயரம் இருந்தது. இரண்டும் சேர்ந்த அமைப்பின் எடையே 6,200 டன் ஆகும். பணிப் பகுதி 7.2 மீட்டர் நீளமும், 3.6 மீட்டர் 25 செ. மீ. குறுக்களவும் கொண்ட ஓர் உருளையைப் போன்றது. கட்டளைப் பகுதியும் அதன் விரிந்துள்ள முனையில் இதே குறுக்களவினைக் கொண்டதே ஆனால் அதன் அடுத்த முனை ஒரு புனலைப் போல் குறுகிய வடிவத்தைக் கொண்டது. அதன் உயரம் 3 மீட்டர் 17-5 செ. மீ. ஆகும். அம்புலி ஊர்தியோ அதன் கால்கள் நீட்டிய நிலையில் 6.6 மீ. 27.5 செ. மீ. உயரமுடையது; 93 மீட்டர் குறுக்களவினைக்


  1. இது 1969ஆம் ஆண்டு மார்ச்சு 8ஆம் நாள் அனுப்பப் பெற்றது. இது 10 நாள் பயணம்.