பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உங்கள் சோகத்தைப் பார்த்தால், நல்ல செய்தி கொண்டு வந்திருப்பதாய்த் தெரியவில்லையே! எதுவாயிருந்தால் என்ன! இந்தாருங்கள், இதைத் தயவு செய்து அருதுங்கள்!

(கிண்ணத்தை அவரிடம் நீட்டுகிறாள்.)

சந்நியாசி : (அருகில் நெருங்கி) தாகம் அதிகம்தான்; ஆயினும் நீ ஒரு வாக்குறுதி கொடுத்தால்தான்-

ஹெட்விக்: அருகில் வராமல், எட்டி நின்றே சொல்லுங்கள்

சந்நியாசி: வந்தவர்களுக்கு உணவளிக்கும் அந்த நெருப்பின் மீது ஆணை-இந்தச் செல்வக் குழந்தைகள் மீது-

ஹெட்விக்: சரிதான், சரிதான்! உடைதான் சந்நியாசி உடை-நீங்கள் துறவியே அல்ல! ஏதோ துக்கத்தால் வேஷம் போட்டிருக்கிறீர்கள் !

சந்நியாசி: மனித குலத்திலேயே மகா துக்கமுடையவன் நான்!

ஹெட்விக்: துக்கம் தெரிகிறது; ஆனால் உங்கள் பார்வை பயங்கரமாயிருக்கிறதே!

சிறிய வால்டர் : (துள்ளியெழுந்து) அம்மா, அதோ அப்பா (வெளியே ஒடுகிறான்.)

ஹெட்விக்: (கூடப் போகத் தயங்கி நின்று)-தெய்வமே!

வில்லியம் : நம்முடைய அப்பா!

சிறிய வால்டர்: அப்பா, மீண்டு வந்துவிட்டீர்களா, அப்பா

வில்லியம் : செல்ல அப்பா! முத்து அப்பா !

டெல்: ஆமாம், ஆமாம்! வந்துவிட்டேன்! அம்மா எங்கே?

சிறிய வால்டர்: அதோ கதவடியில் நிற்கிறாள். அம்மாவுக்கு ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் சந்தோஷம்! மனசு எப்படியிருக்கும், அப்பா!

டெல்: ஓகோ, அப்படியா! ஹெட்விக்! இனி கவலைப் படாதே பெற்ற தாயிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பவர்கள் ஒழிந்தார்கள்!