ஹெட்விக்: நாதா! இத்தனை நாள் நான் பட்ட பாடு நரக வேதனையைக்கூடத் தாங்கலாம் !
(சந்நியாசி உன்னிப்பாய் அவர்களைக் கவனிக்கிறார்.)
டெல்: அதையெல்லாம் இனி மறந்துவிடு! ஆனந்தமாயிரு! நம் சொந்த வீட்டில் நாம் மறுபடியும் ஒன்றுகூடி விட்டோமே !
வில்லியம்:- ஆனால், அப்பா, உன் பெட்டி - வில்லைக் காண வில்லையே! எங்கே வைத்துவிட்டாய் ?
டெல் : இனி அதைக் காண முடியாது! புனிதமான ஓரிடத்தில் அதைப் பதுக்கி வைத்துவிட்டேன்! இனி வில்லும் இல்லை, வேட்ட்ையும் இல்ல்ை
ஹெட்விக்: (பதறிக்கொண்டு) ஓ நாதா! நாதா!
டெல் : ஏன் பதறுகிறாய், ஹெட்விக்!
ஹெட்விக்: அந்தக் கை - அதை நான் மறுபடி தீண்டவே கூச்சமாயிருக்கும் !
டெல் : இந்தக் கைதான் உங்களையும், நாட்டையும் காத்தகை! தைரியமாக அதைத் தூக்கி ஆண்டவரை வண்ங்குகிறேன்!
(சந்நியாசி திடுக்கிட்டுத் திரும்புகிறார்.) இந்தச் சகோதரர் யார் ?
ஹெட்விக்: நீங்களே அவரை விசாரியுங்கள்! அவரைப் பார்க்கவே எனக்குப் பயமாயிருக்கிறது!
சந்நியாசி : நீர்தானே டெல்?...கவர்னரை வீழ்த்திய டெல் ?
டெல் : ஆமாம், யாரிடமும் அதை நான் மறைக்க மாட்டேன்! நான்தான் அவன்!
சந்நியாசி : நல்ல வேளையாகக் கடவுள் என்னை உம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறார் ! உம்மைத் தேடியே நான் வந்துள்ளேன் !
டெல் : நீர் துறவியல்ல-முதலில் உண்மையைச் சொல்லும்.
சந்நியாசி : உம்மைக் கொடுமைப்படுத்திய கொடுங்கோலனை நீர் வீழ்த்திவிட்டீர் ! எனக்கு அநீதி இழைத்த எதிரியை வீழ்த்திவிட்டு நானும் வந்திருக்கிறேன் !