பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 டெல் : (சற்றுப் பின்வாங்கி) நீரா-பயங்கரம்! குழந்தைகளே உள்ளே போங்கள்! ஹெட்விக், சற்று உள்ளே போ!.. நீர்தான்-

ஹெட்விக்: யார் இவர்? கடவுளே, இதென்ன மாயம்!

டெல்: எல்லோரும் ஒதுங்கிச் செல்லுங்கள்! ஒரேயிடத்தில் நீங்கள் இவரோடு நிற்கவும் கூடாது!

(ஹெட்விக்கும் குழந்தைகளும் வெளியே போகின்றனர்.)

டெல் : ஆஸ்திரியக் கோமகன்தானே நீர் ? தந்தையுடன் பிறந்தவரையே-சக்கரவர்த்தியையே-கொலை செய்து விட்டீரா?

சந்தியாசி ஆம்! என் உரிமையையும் உடைமைகளையும் பறித்தவரை வேறு என்ன செய்வது?

டெல் : மகா பாவம்! பூமி இன்னும் உம்மைத் தாங்கி நிற்கிறதே! சூரியன் ஒளியும் உம்மீது படலாமா?

சந்நியாசி : நீராவது என்னிடம் இரக்கம் காட்டுவீர் என்று வந்தேன். நீரும் உமது பகைவரைப் பழி வாங்கவில்லையா?

டெல்: அதிர்ஷ்டங் கெட்ட மனிதரே, கேளும்! மண்ணாசை தொண்டு நீர் செய்தது மகா பாதகம்! என் குழந்தை தலையையும், என் வீட்டையும், நாட்டையும் காக்க நான் பாணம் தொடுத்தேன்! என் நெஞ்சம் களங்கமற்றது. என் கைகள் கறைகளற்றவை! நீர் செய்தது பச்சைக் கொலை; நான் செய்தது இந்தப் பூமியில் என் உயிருக்குப் புனிதமானவைகளை யெல்லாம் பாதுகாக்க!

சந்நியாசி : அப்படியானால், என்னை வெளியேதான் விரட்டப் போகிறீரோ?

டெல் : உம்மிடம் பேசும்போது என் ஆன்மாவே நடுங்குகிறது! உமது பயங்கரப் பாதையிலே நீர் செல்லும்! இது ஒரு பாவமும் அறியாத ஏழைக் குடிசை! இங்கே உம்மைப் போன்றவர்களுக்கு இடமில்லை!

சந்தியாசி: இனி நானும் அதிக நாள் ஜீவிக்கமாட்டேன்! ஜீவித்திருக்கவும் கூடாது!