பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கூடாதா? நான் தங்கள் அருமை மனைவியல்லவா? உங்கள் கவலையில் எனக்கும் பங்கில்லையா? (ஸ்டாபாச்சா அவள் பக்கம் கை கிட்டி, அவள் கையைப் பிடித்துக்கொண்டு மெளனமாக இருக்கிருன்.) உங்களுக் என்ன குறைவு வந்துவிட்டது ? ஓயாமல் உழைக்கிறீர்கள். செல்வம் பொங்கி வழிகிறது. வ்ேண்டும் பொருள்கள் எல்லாம் நிறைந்திருக்கின்றன். ஆடுமாடு களும், அழகான குதிரைகளும் இருக்கின்றன. வீடே. கொட்டாரம்போல விளங்குகின்றது ! ஸ்டாபாச்சர் : வீடு நன்ருய்த்தான் இருக்கிறது; அலங்காரங் களுக்கும் குறைவில்லை; ஆல்ை அது நிற்கும் தரைதான் அழல் மண்ணுக ஆடுகின்றது ! ஜெர்ட்ருட் : கொஞ்சம் விளங்கும்படி சொல்லுங்கள். ஸ்டாபாச்சர் : அன்ருெரு நாள் இப்படித்தான் இந்த மரத்தடி யில் அமர்ந்திருந்தேன். கவர்னரும் அவ்ர் ஆட்களும் இந்தப் பக்கமாக வந்து நம் வீட்டை உற்றுப் பார்த் தார்கள். அவ்வளவுதான், பிடித்தது சனியன்' என்ன்ை அழைத்து, 'இது யார் வீடு ?' என்று கேட்டார் கவர்னர். I என்னுடையது; தரை ஆஸ்திரிய சக்கரவர்த்தி யுடையது ' என்று சொன்னேன். அதற்கு அவர், நாடு முழுதும் நம்முடையது. இவர்கள் இப்ப்டிச் சுதந்திரமாய் மாளிகைகள் கட்டிக்கொண்டு, என் கண்முன்னேயே தயேச்சையாகத் திரிகிறர்கள் ! நன்ருயிருக்கிற் A5ւD3շl கொற்றம்! என்று கூறிவிட்டுக் கொடுமையான தேநீ டன் குதிரை ஏறிச் சென்றுவிட்டார். அது முதல் என்ன் நருமோ என்ற ஏக்கம் என்னை விட்டபர்டில்ல்ை. ஜெட்ருட் ஏக்கமா? உங்களுக்கா ? நெடிய மலைகளும் கடல் போன்ற ஏரிகளும் நிறைந்தது நம் நாடு வையகத்து வளி மெல்லாம் கொழிக்கும் இந்த சுவிட்ஜர்லாந்தில் ஆண் மகனுக்கு ஏக்கம் எதற்கு? நான் பெண்பிள்ளைதான். ஆயினும், வீரம் மிகுந்த ஐபெர்க் என் தந்தை என்பதை மறந்துவிடாதீர்கள். பிறந்த வீட்டில் நானும் என் சகோ தரிகளும் இராட்டினங்களில் கம்பளி நூல் திரிக்கும்போது அடிக்கடி நம் நாட்டுப் பெரிய தலைவர்கள் வந்து என்