10
நிற்பார், யூரியில் உங்களுக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவருக்கு விளக்கமாகச் செய்தி அனுப்புங்கள். அங்கே நமக்கு வேண்டியவர்கள், நம்பிக்கையானவர்கள், இருக்கிறார்கள் அல்லவா?
ஸ்டாபாச்சர்: எத்தனையோ வீரர்கள் இருக்கிறார்கள், நம்பத் தகுந்த பிரபுக்களும் இருக்கிறார்கள். (எழுந்து நிற்கிறான். கண்ணே! இப்போது என் கருத்தில் பெரும் புயலையே உண்டாக்கி விட்டாய்! பயங்கரமான சிந்தனைகள் என் மனத்தில் அலைமோதுகின்றன. நான் நினைக்கக்கூட கூசும் கருத்துக்களை நீ தீரத்துடன் சொல்மாரியாகப் பொழிந்துவிட்டாய். ஆனல் நீ சொல்வதன் விளைவை பற்றிச் சிந்தித்துப் பார்த்தாயா? அமைதியான இந்த மலைப்பிரதேசங்களில் வாள்களும் வேல்களும் மோதினால் என்னவாகும்? ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு பயந்து வாழும் நம் மக்கள் உலகையே அடக்கியாளும் ஆஸ்திரியர்களை எதிர்த்து நிற்க முடியுமா? நம் எதிரிகள் எது சாக்கு என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் தலை தூக்க வேண்டியதுதான் தாமதம், ஆயிரக்கணக்கில் அவர்கள் துருப்புக்களை நம்மீது ஏவி விடுவார்கள் ஆந்தக் கொடுமைகளைத் தாங்க முடியுமா? இருக்கிற சுதந்திரங்களும் அத்தோடு ஒழிந்துபோய்விடும்!
ஜெர்ட்ருட்: நீங்களும் ஆண் பிள்ளைகள்தானே! உங்கள் கைகளிலும் கோடரிகள் இல்லையா? விற்களையும் அம்புகளையும் நம் மக்கள் எதற்காகச் சுமந்து திரிகிறார்கள்? சும்மா தலை கவிழ்ந்து கிடப்பவர்களுக்குச் சுதந்திரம் கிடைக்குமா உரம் வைக்காத நிலத்தில் பயிர் உண்டாகுமா? தீரர் களையும் வீரர்களையும் தழையாக்கிச் சிவப்பு உதிரத்தை நீராகப் பாய்ச்சிய நிலத்தில்தானே சுதந்திரம் விளையும்?
ஸ்டாபாச்சர்: உண்மைதான். ஆனல் போராட்டம் என்று ஏற்பட்டால், நீ விரும்பி வாழும் இந்த மாளிகைதான் முதலில் தரைமட்ட மாகும்!
ஜெர்ட்ரூட்: அற்ப ஆசைகளைத் துறந்துதான் நான் பேசினேன்.நாடு வேண்டுமா,வீடு வேண்டுமா என்ற நிலை வந்தால், நாட்டுக்காக நானே இந்த வீட்டுக்குத் தீ வைக்க முனைந்துவிடுவேன்!