பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மேஸ்திரி: இந்தக் கோட்டை கொத்தளங்களும், அணைப்புச் சுவர்களும் என்றுமே அழியாமல் இருக்க ?? கட்டியிருக்கிருர்கள். டெல் : கட்டிய கைகளே உடைத்தெறியவும் முடியும இவர்கள் கட்டியிருப்பது இது; அதோ தெரியும் மலைகளே கடவுள் கட்டியிருக்கும் கற்கோட்டைகள் ! (மலைகளைச் சுட்டிக் காட்டுகிருன்.) (முரசு அறையும் ஒலி கேட்கிறது. கவர்ன ருடைய ஆட்கள் சிலர் நீண்ட கழியில் தொப்பி ஒன்றை மாட்டித் தூக்கி வருகின் முனர். மு. ர ச டி ப் ப வ னு ம் அவனைத் தொடர்ந்து பெண்களும் குழந்தைகளும் ஒருவரை யொருவர் தள்ளிக்கொண்டு வருகின்றனர்.) முதல் கொற்றன்: தென்ன முரசொலி ? கவனித்துக் கேளுங்கள் அதோ ! மேஸ்திரி; விரித்திரமான ஊர்வலம் வருகிறது; கழியிலே தொப்பி ஒன்றும் தொங்குகிறது! முரசடிப்பவன் சக்கரவர்த்தியின் பெயரால் அறிவிப்பது என்னவென்ருல்-கேளுங்கள் ! ஒரு கையாள்: அமைதி, அமைதி! கேளுங்கள் ! முரசடிப்பவன் யூரிவாசிகளே! எல்லோரும் இதோ இந்தத் தொப்பியைப் பாருங்கள் அல்டார்பில், சந்த்ை அருகில், ஓர் உயர்ந்த கம்பத்தின் உச்சியில் இது வைக்கப்படும். அந்த வழியாகச் செல்லும் அனைவரும், இந்தத் தொப்பி யைக் கண்டதும் தங்கள் தொப்பிகளைக் கழற்றிவிட்டு, நின்று, முழங்கால் படிந்து, கவர்னரை நேரில் வணங்குவது போல் #» வணங்கிவிட்டுச் செல்லவேண்டும். இந்த உத்தரவை மீறி நடப்பவர்களின் உயிர்களும் சொத்துச் களும் பறிபோய்விடும். (மக்கள் உரக்கச் சிரிக்கின்றனர். முரசு முழங்குகின்றது. ஊர்வலம் மேலே செல் கின்றது.) முதல் கொற்றன் : கவர்னருடைய புதுக் கற்பனை என்ன அருமையாக உருவாகி யிருக்கிறது !