17 தான். எவ்வளவு கஷ்டமாயிருந்தாலும் நீ சற்றுப் பொறுத்துக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். இமல்ச்தல்: மாடுகளை அவிழ்த்துக் கொடுத்துவிட்டு, நானே ஏன்ர இழுக்க வேண்டும் என்று அவன் சொன்னதில் யாருக்குத்தான் கோபம் வராது, மாமா? நான் என் உணர்வையே இழந்து, வெறி கொண்டுவிட்டேன்! வால்டர்: சரிதான், அப்பா! வயதான எங்களுக்கே ஆத்திரம் வருகிறதே-இளங்கன்றுகள், உங்களைக் குற்றம் சொல்லி என்ன பயன்! மெல்ச்தல்: எந்த நேரமும் அப்பாவைப் பற்றிய துடிப் பாகவே இருக்கிறது. என் காரணமாகப் பாவிகள் அவரைப் பிடித்து நசுக்கித் துன்புறுத்துவார்களோ ! இந்த o நேரத்தில் நான் அவர் பக்கத்தில் இருக்கவேண்டாமா? வால்டர் என்ன இருந்தாலும் கொஞ்சம் பொறு-சற்று அமைதியாயிரு. அந்தர்வால்டனிலிருந்து விரைவில் செய்தி வரும், வாயிற் கதவை யாரோ தட்டுகிற ஓசை கேட்கிறது-நீ உள்ளே போ! அபாயம் ஒன்றும் இல்லை யானுல், உன்னைக் கூப்பிடுகிறேன். -- (மெல்ச்தல் உள்ளே போகிருன்.) --- இவனே துக்கத்தினுல் துடிக்கிருன்! என் மனசில் தோன்றுகிறவைகளை இவனிடம் எப்படிச் சொல்வது! யார் கதவைத் தட்டுகிருர்கள் அதிகாரிகளின் கையாட்கள் வீடுதோறும் நுழைந்து பார்க்கிருர்கள். எங்குப் பார்த்தாலும் துரோகிகளும் காட்டிக் கொடுப்பவர்களும்! (போய்க் கதவைத் திறந்து, உள்ளே வந்த ஸ்டாபாச்சரைக் க ண் டு ஆச்சரியப் படுகிருன்.) யாரிது? ஸ்டாபாச்சர், நீதான ? சரியான விருந்தாளிதான் வந்திருக்கிருய் வா, வா, வா! என்ன செய்தி? யூரியில் ஏதேனும் காரியம் ஆகவேண்டி யிருக்கிறதா? ivடாபாச்சர்: (அவனுடன் கை குலுக்கிவிட்டு) பழங்காலத்தைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறேன்; பழைய சுவிட்ஜர் லாந்தை நாடி வந்திருக்கிறேன்! அ-2
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/24
Appearance