பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வல்லரசை அங்கீகரித்துள்ளன. நமக்கு மட்டும் என்ன வாம் ? வெர்னர் : இதை என் காதால் கேட்க வேண்டுமா, அதுவும் உன் வாயிலிருந்து ? ருடென்ஸ் : உங்களையே கேட்கிறேன்-இங்கே பெரிய பண்ணையாராக மாளிகையில் குந்தியிருந்து, கல்வியறிவில் லாத பாமரரான குடியானவர்கள் புடைசூழ, அவர்கள், ' யஜமான், யஜமான்' என்று புகழ்பாடுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதைவிட, வீரமும் தீரமும் மிக்க ஆஸ்திரிய அரசரை அண்டியிருந்து, பட்டங்களும் பதவிகளும் பெற்று, இன்புறுவது மேலல்லவா? வெர்னர் : ருடென்ஸ்! இப்பொழுது நன்கு தெரிந்து கொண் டேன். அந்நியர் மாயையில் நீ மயங்கிவிட்டாய். வெறும் புகழ்ச்சியில் திளைத்து, உன் உள்ளமும் விஷமாகி விட்டது ! ருடென்ஸ் : கும்பிட்டுவாழும் குடியானவர்களுக்குத் தலைவர் களாகி, அவர்களுடைய நாடோடிப் பாடல்களையும் ஆடு மாடுகளின் மணி ஓசையையுமே கேட்டு இன்புற எனக்கு மனமில்லை. என் வாளும் கேடயமும் துருப்பிடித்துத் தொங்குகின்றன. அரசினரோடு சேர்ந்தால், நாம் நம் மலைகளையும் மடுக்களையும் தாண்டி, நாடுகள் நகரங்களை யெல்லாம் சுற்றிவரலாம். பல நாடுகளில், பல போர்க் களங்களில் புகழ்மாலை சூடலாம் ! வெர்னர் : வழிதவறிவிட்ட வாலிபனே, கேள்! அதிகாரி களின் ஆடம்பரங்களில் தேட்டம் கொண்டு நிற்கிருய். அதல்ை உன்னைப் பெற்றெடுத்த பொன்னுட்டையே நிந் திக்க முந்திவிட்டாய் ! உன் முன்னேர்களையே பழிக்க முன் வந்துவிட்டாய் ! நீ இழித்துரைக்கும் இந்தப் பாமர ஜனங் களே உலகில் இதுவரை எவர்க்கும் அடிமைப்படாமல் தலை நிமிர்ந்து வாழும் வீரசுதந்திர மக்கள்! இவர்களுடைய நாட்டுப் பாடல்களை இப்போது வெறுத்துப் பேசுகிருய். ஆல்ை, வெளி நாடுகளில் சுற்றும்போது, இவைகள்ை நீ எண்ணிப் பார்த்தால், உள்ளம் உருகுவாய்! வளம் பொழி யும் நம் நாட்டில், சுதந்திரமாக இளவரசன் போல வாழ்