உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வதைவிட்டு, அடிமை வாழ்வில் ஆசை கொள்ளாதே ! உற் ருர் உறவினர் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு நீ மட்டும் தனிப் பாதையில் செல்வது நலமல்ல. அதோ சுவரில் தொங்குகின்றன, என் உடைவாளும் கேடயமும் எத்தனை சண்ட்ைகளில் இவை எனக்கு வெற்றி வாங்கித் தந் துள்ளன, தெரியுமா ? இவை ஆண்டவன் எனக்கு அருளி ய்வை ! என் வாழ்க்கையின் இறுதியில், இவைகளை ஆஸ்தி ரிய மன்னரின் திருவடிகளில் வைத்து, அவர் அளிக்கும் பரிசுகளாக இவைகளைத் திரும்ப ஏற்றுக்கொள்ளவா நீ விரும்புகிருய் ? டென்ஸ் : எங்கனும் ஆஸ்திரிய ஆட்சி சுண்டைக்காய் போன்ற இந்தச் சுவிஸ் நாடு மட்டும் தனித்திருக்க முடி யுமா? இந்த நாடு முழுதுமே அவர்களுடைய தாகிவிட் டது. நீதித்தலங்கள், பள்ளிகள், ஆறுகள், நிலங்கள், சாலைகள், சோலைகள் யாவும் அவர்களுடையவை. வல் லமை மிகுந்த வல்லரசை எதிர்ப்பது பார்வையை யிழந்து பாறையில் முட்டுவது போல்தான்! மன்னர்க்கு விசுவாசமா யிருப்பதே பிற்காலத்தில் நலமளிக்கும் ! வர்னர் : அவ்வளவு மேதாவியாகிவிட்டாயா நீ! உன் முன் ளுேர்களைவிட நீ அறிவிலே மேம்பட்டு விட்டாய், சந்தேக மில்லை ! சுதந்திரத்திற்காக அவர்கள் வீடுவாசல்களையும், பெறுதற்கரிய பொருள்களையும், உயிர்களையும் பணயம் வைத்துப் போராடியது வீண்வேலைதான், அப்பா, வீண் வேலைதான்! ஆஸ்திரியக் கொடுங்கோலால் மக்கள் படும் அவதிகள் உன் கண்ணில் படவில்லை. லூஸர்னுக்குப் போய்ப் பார்! ஆடுகளையும் மாடுகளையும் அடித்துக் கொண்டு போகிருர்கள். இனி வீட்டுக் கதவுகளையும் நிலை களையும் பிடுங்க வருவார்கள்! அவர்களுடைய யுத்தங்களுக் கரக நாம் உதிரம் சிந்தவேண்டும் என்கிருய், இரத்தம் சிந்தவேண்டியது அவசியம்தான் என்ருல், நம் சுதந்திரத் திற்காகச் சிந்துவதே மேல், அதிக லாபமும்கூட! டென்ஸ் : ஆடு மாடுகள் மேய்க்கும் நம் மக்கள் வல்லரசை எதிர்த்து ஒரு கணநேரம் நிற்க முடியுமா ? வர்னர் : நம் மக்களை அவ்வளவு கேவலமாக எண்ணுதே! சுற்றியுள்ள நாடுகள் எல்லாம் அடிமைப்பட்டபோதிலும்,