30 முப்பத்து மூன்று பேர்கள் முன்புறமாக வந்து நெருப்பைச் சுற்றி வளேயமாக அமர் கின்றனர்.) வால்டர்: நம் சொந்த நாட்டிலே நல்ல காரியத்திற்காக நாம் சந்திப்பதற்கு இரவில்தான் கூடவேண்டியதா யிருக் கிறது! இதுவும் ஒரு காலம்! மெல்ச்தல் : ருட்டிலே கூடுவது வெளிச்சத்திலே நடக்க வேண்டிய வேலைக்காகத்தானே! ரோஸல்மன் : அன்பர்களே! நாம் நம் நாடுமுழுவதற்கும் பிரதிநிதிகளாகக் கூடியிருக்கிருேம். ஆகவே நம் முன் ஞேர் வழக்கப்படி, ஆண்டவனைத் துதித்துக் கொண்டு நம் வேலையைத் தெர்டங்குவோம்! நீதி எங்கே யிருக்கிறதோ, அங்கே கர்த்தரும் துணை நிற்பார்! ஸ்டாபாச்சர்: அவ்வண்ணமே ஆகட்டும் ! நமது நியாயமே நமக்கு ஒளியாக வழிகாட்டட்டும் ! = மெல்ச்தல் : நாட்டில், நம் மூன்று மாவட்டங்களிலும் முதன் மையானவர்கள் அனைவரும் இங்கு வந்திருக்கின்றனர்! பீட்டர் : நாம் மூன்று வகுப்பினராகக் கூடியிருக்கிருேம் நம் மில் எந்த வகுப்பிலிருந்து தலைவரைத் தேர்ந்தெடுப்பது? மெய்யர் : அந்தர்வால்டனுக்காக நான் சொல்லுகிறேன்எங்களுக்குத் தலைமைப் பதவி வேண்டாம். மற்ற இரு பிரிவினருள் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் மெல்ச்தல் : அப்படியே செய்யலாம், ஆட்சேப மில்லை ! ஸ்டாபாச்சர் : யூரிக்காரரே தலைமை வகிக்கட்டும்; எல்லோருச் கும் பெருமைதான் ! == o வால்டர் : நாம் எல்லோருமே ஆதியில் சுவிஸ்ஸிலிருந்து பிரிந்துவந்தவர்களே ! சுவிஸ்ஸ்-க்கு இந்தப் பெருமை இருக்கட்டுமே! ரோஸல்மன்: நமக்குள் இந்த நட்புப் போட்டியை முடித்துக் கொள்வோம். மந்திராலோசனையில் சுவிஸ் தலைமை யாக இருக்கட்டும்! வால்டர் (வா8ள ஸ்டாபாச்சரிடம் நீட்டி) சரி, நீ பெற்றுக் பொளி | i
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/37
Appearance